திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய நடிகைகளில் கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். மேலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பார்கள். நயன்தாரா, இளையதளபதி விஜயின் “பிகில்” படத்தில் நடித்தும் , அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் OTT தளத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஹீரோக்களளுடன் நடித்து ஒரு புறம் ஹிட் கொடுத்தாலும் நடிகை நயன்தாரா வருடத்திற்கு ஒரு முறை லீடு ரோலில் நடித்து ஹிட் கொடுத்து விடுகிறார். இவர் லீட் ரோலில் நடித்த அறம், கோலமாவு கோகிலா , மாயா போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா மீண்டும் லீட் ரோலில் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் டீஸர் இன்று (நவம்பர் 18) வெளியாகியுள்ளது.

Advertisement

மூக்குத்தி அம்மன் படத்திற்கு பின்னர் நடிகை நயன்தாரா ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏற்கனவே சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அசுத்த பேய் படமான அவள் படத்தை இயக்கிய மிலந்த் ராவ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், படத்தில் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இயக்கப்போவதாக இயக்குனர் கூறி இருந்தார். இந்த படத்தின் பணிகள் கடந்த ஆண்டே துவங்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று நயன்தாராவின் 36 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. டீசரை பார்க்கும் போதே இந்த படம் ஒரு பயங்கரமான த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement