விக்னேஷ் சிவனின் கருத்தால் நயன் படத்திற்கு வந்த சிக்கல்.! எல்லாம் வாய்க்கொழுப்பு.!

By Rajkumar · 4/4/2019

கடந்த சில நாட்களாகவே நயன்தாரா மற்றும் ராதாரவி பிரச்சனை தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றிய சரியான கருத்துக்களை தெரிவித்து இருந்தார் இதனைக் குறிப்பிட்டு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொலையுதிர் காலம் படம் குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே உளறிக்கொட்டினர் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவால் தற்போது கொலையுதிர் காலம் படக்குழுவிற்கு மிகப்பெரிய தலைவலி வந்துள்ளது. அது என்னவெனில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் கைவிடப்பட்ட படம் என்று குறிப்பிட்டதால், இந்த படத்தை ட்ரைலர் வெளியீட்டிற்கு முன்னதாக வாங்கி கொள்கிறேன் என்று கூறிய பலரும் தற்போது கைவிடபட்ட படத்தை எப்படி வாங்குவது என்று யோசித்து வருகின்றனர்.

மேலும், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்க முடிவெடுத்தது. ஆனால், விக்னேஷ் சிவனின் இந்த பதிவிற்கு பின்னர் அந்த நிறுவனமும் பின்வாங்கியுள்ளது. இதனால் படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றனராம். மேலும், படத்தை பற்றிய தவறான கருத்தை பரப்பிய விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர முடிவெடுத்துள்ளனராம். இல்லை என்றால் தனது காதலர் பேசிய கருத்திற்காக நயன்தாரா தான் வாங்கிய சம்பளத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று படக்குழு தெரிவித்துள்ளதாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full