இவ்ளோ தான் கடவுள் இதான் பக்தி - சாட்டையடி வசனத்துடன் வந்த நயனின் மூக்குத்தி அம்மன் படத்தின் ட்ரைலர்.

By Rajkumar · 25/10/2020

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். இவர் முதலில் சினிமா திரை உலகில் கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இப்போது கதைக் களத்திற்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக நயன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=5AzCHtbmW-U&feature=youtu.be

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளி வந்து சூப்பர் ஹிட் ஆன பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்திலும் நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார். இந்த வருடம் தொடக்கத்திலேயே நயன்தாரா அவர்கள் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் முக்குத்தி அம்மன் படத்தில் நடித்து இருக்கிறார். ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குனராக மூக்குத்தி அம்மன் படத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் கூட இருந்தனர்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்தயாரித்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீஸர் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது இந்த படம் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு பேண்டசி படம் போல தோன்றுகிறது. இந்த படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full