முதன் முதலில் காதலை சொன்னது யார் ? 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா. (இவர்தான் சொன்னதா)

By Rajkumar · 6/6/2022

தனக்கும் பகத் பாசிலுக்கும் இடையே காதல் மலர்ந்தது குறித்து நஸ்ரியா பேட்டியில் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நஸ்ரியா. இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கி இருந்தார். ஆனால், இவர் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

பின் இவர் மலையாள மொழியின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்பு நஸ்ரியா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் தெலுங்கு மொழி படத்தின் மூலம் சினிமாவுக்கு நஸ்ரியா ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.தற்போது முதன்முறையாக இவர் தெலுங்கில் கதாநாயகியாக 'அன்டே சந்தரானிக்கி' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் நானி கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

நஸ்ரியா நடித்து இருக்கும் படம்:

விவேக் ஆத்ரேயா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் ரோகிணி, நதியா, அழகம் பெருமாள், ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். விவேக் சாகர் இந்தப் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார் மற்றும் நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், இந்த படம் ஜூன் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா :

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் நானி, கதாநாயகி நஸ்ரியா, துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்த நஸ்ரியா கூறி இருப்பது, தமிழ்நாட்டில் இருந்து எனக்கு கிடைத்த வரவேற்பு நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று. மீண்டும் 'அடடே சுந்தரா' என்ற படம் மூலம் திரும்ப வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நஸ்ரியா அளித்த பேட்டி:

பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தை கொடுக்கும். எனக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014-ல் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படத்தில்தான் நாங்கள் இருவரும் சேர்ந்து முதன்முறையாக பணியாற்றி இருந்தோம். எங்கள் காதலுக்கு பெற்றோர் தரப்பிலும் சம்மதம் இருந்தது. அவர்கள் மிக மகிழ்ச்சியாக திருமணம் நடத்தி வைத்து இருந்தார்கள். நான் தான் முதலில் அவரிடம் காதலை சொன்னேன் என்று நினைக்கிறேன்.

தன் காதல் திருமணம் குறித்து சொன்னது:

அவரை வாழ்நாள் முழுவதும் நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று அவரிடம் நான் சொன்னது அவருக்கு பிடித்திருந்தது. இப்படி எந்தப் பெண்ணும் என்னிடம் இதற்கு முன்பு சொன்னது இல்லை என்று சொன்னார். அது போல நான் திருமணம் முடிந்ததும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தேன். அதற்கு பிறகு நான் மீண்டும் நடிக்க வேண்டும் என பகத் ஆசைப்பட்டார். நான் எப்போதும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். இருவரும் வேலை தொடர்பாகவும் நிறைய பகிர்ந்து கொள்வோம் என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full