எனக்கு இது தான் ப்ரச்சனை, மன்னித்து விடுங்கள் - நடிகை நஸ்ரியா வெளியிட்ட திடீர் அறிக்கை

By subhashini · 18/4/2025

தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து நடிகை நஸ்ரியா வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நஸ்ரியா. இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கி இருந்தார். ஆனால், இவர் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் மலையாள மொழியின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்பு நஸ்ரியா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் மீண்டும் தெலுங்கு மொழி படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.

நஸ்ரியா குறித்த தகவல்:

இந்த படத்தை தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இதன் மூலம் நஸ்ரியா மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சூக்‌ஷ்மதர்சினி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இவர் எந்த ஒரு படப்பிடிக்களுமே கலந்து கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். எப்போது சோசியல் மீடியாவிலும் இவர் ஆக்டிவாக இருப்பார். ஆனால், சில மாதங்களாகவே இவரை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

நஸ்ரியா அறிக்கை:

இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை நஸ்ரியா அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் எப்போதுமே இந்த உலகில் ஆக்டிவாக இருப்பவள். ஆனால், சமீபகாலமாக நான் ஆளே காணாமல் போய் விட்டேன் என பலரும் நினைத்திருக்கிறீர்கள். அதற்கு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக நான் உடல் மற்றும் மன ரீதியில் தனிப்பட்ட சவால்களுடன் போராட்டம் கடுமையாக இருந்ததால் தான் என்னால் பொதுவெளிக்கு வர முடியவில்லை.

View this post on Instagram

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

என்னுடைய 30ஆவது பிறந்தநாள், புத்தாண்டு, திரைப்படத்தின் வெற்றி போன்ற பல நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள முடியவில்லை. அதோடு எனக்கு என்ன ஆனது? என்றும் நண்பர்களுக்கு போன் கால், மெசேஜ்க்கு கூட பதிலளிக்க முடியவில்லை. அதற்காக என்னுடைய நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதனால் உங்களுக்கு நிறைய கவலைகளும் கேள்விகளும் எழுந்திருக்கும். அதற்காகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை வேலை தொடர்பாக தொடர்பு கொண்ட சக பணியாளர்களுக்குமே நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், எனக்கு சிறந்த நடிகருக்கான கேரளா திரை விமர்சகர்கள் விருதை கொடுத்திருக்கிறார்கள். இதை சொல்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கும் நன்றி. இது கடுமையான பயணம். இருந்தாலும் நான் ஒவ்வொரு நாளும் நலமடைந்து வருகிறேன் என்பது உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆறுதலுக்கும் நன்றி. நாம் முழுவதுமாக திரும்பி வர சில நாட்கள் ஆகும். ஆனால், நான் குணமாகுவதற்கான பாதையில் இருக்கிறேன் என்று சத்தியம் செய்கிறேன். என்னை நினைத்து வருத்தப்பட நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்களுக்கு விளக்கம் கொடுப்பது கடமை என்று நினைத்துதான் இதை வெளியிட்டேன். ஐ லவ் யூ ஆல். விரைவில் மீண்டும் கனெக்ட் ஆகலாம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full