தனது மகளின் முதல் பிறந்தநாளில் குயூட் வீடியோவை வெளியிட்ட நெடுஞ்சாலை பட நடிகை.
தமிழ் திரைப்பட துறையில் வெற்றிகரமாக வசூலை தந்த நெடுஞ்சாலை, ஜீரோ போன்ற படத்தில் நடித்தவர்தான் ஷிவதா. மேலும் அவர் அதே கண்கள் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றார். மேலும் ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, தான் நெடுஞ்சாலை படத்தையும் இயக்கினார். மேலும் ஷிவதா தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.
https://www.instagram.com/p/CC2FAkIHgIu/
இவர் சமீபத்தில் முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையாள பெண்மணியான சிவதா சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது . அவருடைய பெண் குழந்தைக்கு 'அருந்ததி' என்றும் பெயர் சூட்டினார். இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக குழந்தையின் கைஎன் கை மீது இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் சிவதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
இதையும் பாருங்க : இது தான் பிக் பாஸ் 4 லோகோ - அதிகாரபூர்வ டீசர் இதோ. ஆனால், ஒரு வருத்தம்.
திருச்சியில் பிறந்த கேரளாபெண் தான் ஷிவதா. சிவதா பெயரின் பொருள் சிவனிடம் வரம் பெற்றவர் என்றும் பார்வதியின் இன்னொரு பெயர்தான் சிவதா என்றும் கூறினார். இவர் பரத நாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.ஆதனால் 2007 இல் பரதநாட்டியத்திற்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார்.. கல்லூரி படிப்பு முடித்தவுடன், பாசில் இயக்கத்தில் வெளிவந்த லிவிங் டுகெதர் என்ற படத்தில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
https://www.instagram.com/p/B__RLs3nEaa/
தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் படம் நடித்து உள்ள இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவாக உள்ளார். சமீபத்தில் இவரது மகள் அருந்ததிக்கு முதல் பிறந்தநாள் சென்றுள்ளது. இதையொட்டி தனது மகள் பிறந்தது முதல் தற்போது வரை எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தொகுத்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.