இந்த காலத்துல ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழறது தப்பா? குழந்தைகள் தான் பாவம்- நீலிமா ராணி அளித்த பேட்டி

By subhashini · 4/7/2024

இன்றைய கால திருமண வாழ்க்கை குறித்து நடிகை நீலிமா ராணி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நீலிமா ராணி. இவர் உலக நாயகன் கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுமாகி பல படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அரண்மனை கிளி’ என்ற தொடரில் நடித்து இருந்தார். பின் சிறிய இடைவெளிக்கு பின் இவர் ’16 ஆகஸ்ட் 1947′ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் கௌதம் கார்த்திக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களை தயாரித்தும் வருகிறார்.

நீலிமா ராணி குறித்த தகவல்:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப் போல’ தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய கணவர் குறித்தும், இன்றைய கால திருமணம் குறித்தும் கூறியிருப்பது, எல்லா காலகட்டத்திலும் என்னுடைய கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருடைய ஆதரவு எனக்கு எப்போதுமே இருக்கிறது. இப்போ இருக்கும் காலகட்டத்தில் ஒருவருடன் பழகுகி, காதலித்து திருமணம் செய்து கொண்டு சில மாதத்திலேயே இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். இது ஒன்றும் தவறில்லை என்று கூறப்படுகிறது.

நீலிமா ராணி பேட்டி:

இந்த மாதிரியான பழக்கங்கள் தான் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவருக்கு ஒருவர் என்று வாழ்வதெல்லாம் கிரிஞ்சி போல பார்க்கிறார்கள். உண்மையிலேயே இது ரொம்ப தவறான விஷயம். நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் அவர் உங்களுடைய பார்ட்னர் ஆகிறார். இது நீங்களே எடுத்த முடிவு. அதன் பின்னர் என்ன நடந்தாலும் அதற்கு நீங்கள் அவருடன் தான் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. குறிப்பாக, திருமணமாகி குழந்தைகள் எல்லாம் வந்த பிறகு நீங்கள் பிரிந்து போவது ரொம்ப தவறு.

இன்றைய காலம் திருமணம்:

இதனால் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுடைய சந்தோஷத்தை இழக்கிறார்கள். நான் இங்கு பணம், புகழைப் பற்றி பேசவில்லை. குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் அவர்களுடைய வாழ்க்கையும் சரியாக அமையாது. உதாரணத்திற்கு என்னுடைய அப்பா, அம்மா இடையே நிறைய பிரச்சனைகள் எல்லாம் நடந்திருக்கிறது. இருந்தாலும் என்னுடைய அம்மா கடைசிவரை அப்பாவுடன் தான் வாழ்ந்தார். ஒரு சில நேரத்தில் நானே என்னுடைய அம்மாவிடம் இப்படிப்பட்ட ஒரு அப்பா தேவை இல்லை என்றெல்லாம் சொல்லியிருகிறேன்.

கணவர் குறித்து சொன்னது:

இருந்தும் அம்மா அப்பாவின் கடைசி நொடிவரை அவருடன் தான் இருந்தார். அதே போல் தான் என்னுடைய கணவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். அவர் தான் என்னை வளர்த்தார். அவரை நான் திருமணம் செய்து கொள்ளும் போது 21 வயது. மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும், எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் எனக்கு அவர் சொல்லிக் கொடுத்தார். எனக்குள் இருக்கும் பாசிட்டிவ்வான எனர்ஜி காரணம் என்னுடைய கணவர் தான். இருவருக்கும் 10 வருடங்கள் வித்தியாசம். திருமணம் செய்யும் போது ஒருவர் அதிக புரிதலோடும், இன்னொருவர் குறைவான புரிதலுடனும் இருப்பார். அது நன்றாகத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full