கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்கணும்- நீலிமா ராணி கொடுத்த மேரேஜ் அட்வைஸ்

By Rajkumar · 11/7/2024

தனது திருமண வாழ்க்கை குறித்தும், கணவர் குறித்தும் நடிகை நீலிமா ராணி அளித்திருக்கும் பேட்டிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நீலிமா ராணி. இவர் உலக நாயகன் கமல் நடித்த 'தேவர் மகன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ன பழமொழி தொடர்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'வானத்தைப்போல' சீரியலில் நடிக்கிறார். சீரியல்களில் மட்டும் இல்லாமல் நீலிமா பல்வேறு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த படம் 'ருத்ரன்'. நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த இப்படத்தை இயக்குனர் எஸ். கதிரேசன் இயக்கி இருந்தார். இப்படத்தில் நீலிமா டாக்டர் ரோலில் நடித்திருந்தார்.

நீலிமா ராணி பேட்டி:

நீலிமா ராணி, இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நடிகை நீலிமா ராணிக்கும் அவரது கணவர் இசைவாணனுக்கும் சுமார் 12 வருடங்கள் வயது வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் சிலர் நீலிமாவை கேலி செய்து வந்த நிலையில், தற்போது அவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=ZhRjo0hjR60

கணவர் குறித்து நில்மா:

பேட்டியில் நீலிமா, என்னுடைய கணவர் இசைவாணனை எனக்கு கடந்த 20 வருடங்களாக தெரியும். எனக்கு எல்லாம் கற்றுக் கொடுத்ததே அவர்தான். எங்களுக்குள் இருக்கும் புரிதலுக்கான முக்கிய காரணம் வயது வித்தியாசம் தான் என்றார். கணவன் மனைவிக்குள் வயது வித்தியாசம் இருப்பதால் ஒருவர் பக்குவமாகவும், இன்னொருவர் அரைகுறையாகவும் இருப்பார்கள். இதனால் அவர்களுக்குள் புரிதல் சமமாக இருக்கும். இருவருமே பக்குவமாக இருந்தால் வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.

வயது வித்யாசம் இருக்கணும் :

மேலும், என் கணவர் தான் என்னை வளர்த்தார். அவரை நான் திருமணம் செய்து கொள்ளும்போது எனக்கு 21 வயது. மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த மாதிரியான உடைகள் அணிய வேண்டும் என்றெல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்தது என் கணவர் தான். எனக்குள் இருக்கும் பாசிட்டிவான எனர்ஜிக்கு காரணமே எனது கணவர்தான். அதனால் கணவன் மனைவிக்குள் கண்டிப்பாக வயது வித்தியாசம் இருக்க வேண்டும். அப்போதான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பேட்டியில் நீலிமா குறிப்பிட்டுள்ளார்.

நீலிமா திரைப்பயணம்:

குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்படத்தை தொடங்கிய நீலிமா, நிறைய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தம், இதய திருடன், மொழி, சந்தோஷ் சுப்ரமணியம், சிலந்தி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள், என்றென்றும் புன்னகை போன்ற தொடர்களை நீலிமா தயாரித்துள்ளார். இப்படி பன்முகம் கொண்ட நீலிமா, மேலும் பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full