தீ-விபத்தில் உயிரிழந்துள்ள நீங்கள் கேட்ட பாடல் விஜய சாரதி பெற்றோர்கள் - முதன் முறையாக அவரே கூறிய நெஞ்சை உலுக்கும் உண்மை

By subhashini · 6/12/2021

90 காலகட்டத்தில் சன் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பான நீங்கள் கேட்ட பாடல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜயசாரதி. இவரை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஊர் ஊராக சென்று நேயர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விருப்பமான பாடல் கேட்டு தொலைக்காட்சியில் போட்டு வந்தார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் சூப்பர் சீனியர் என்று சொல்லாம். பின் இதன் மூலம் இவருக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனை தொடர்ந்து இவர் சிரியல்களில், படங்களிலும் நடித்தார். பின் நடுவில் கொஞ்சம் காணாமல் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார்.

இப்படி ஒரு நிலையில் விஜயசாரதி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், யூடியூப் சேனல் நடத்தும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். என்னைப் பற்றி எழுதுவது, விசாரிப்பது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 90கிட்ஸ் இலிருந்து 2k கிட்ஸ் வரை எல்லோரும் என்னை நினைவில் கொண்டு கேட்பதில் பெருமையாக இருக்கிறது. மறைந்த நடிகர் சசிகுமார் மகன் தான். நான் என்னுடைய அப்பாவும் அம்மாவும் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் நடந்த தீ விபத்தில் இறந்து விட்டார்கள்.

அப்ப நானும் என் அக்காவும் ரொம்ப சின்ன பிள்ளைகள். எங்களை என் பாட்டி தான் வளர்த்தார்கள். ரொம்ப வருஷத்துக்கு பிறகு தான் எங்கள் அம்மா, அப்பா இறந்ததை நான் உணர்ந்தேன். ஆனால், சோசியல் மீடியாவில் என் அப்பா, அம்மா இறப்பு குறித்து உங்களுக்கு தோன்றுவது எழுதுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து இந்த மாதிரி எழுதாதீர்கள். இதைப் பார்க்கும் போதெல்லாம் மனது வலிக்கிறது. இது ஏன் செய்கிறீர்கள்? உங்களுடைய சேனல் பிரபலத்திற்கு அடுத்தவர்களுடைய உணர்வில் விளையாடாதீர்கள்.
அதோடு மட்டுமில்லாமல் நடிகர் சங்கம் தான் சசிகுமார் உடைய மகள், மகனை வளர்த்து என்று சொல்லி இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=5My6waTNGAo

இது மாதிரி பேசுவார்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்கிறேன். என்னையும் என்னுடைய அக்காவையும் வளர்த்தது, படிக்க வைத்தது என்னுடைய அம்மாவோட அம்மா அதாவது என்னுடைய பாட்டி தான். வேற யாரும் ஒரு பைசாகூட செலவு பண்ண கிடையாது. நாங்கள் எதையும் எதிர்பார்க்க இல்லை. எங்களுடைய பாட்டியும் யார்கிட்டயும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் எங்களை வளர்த்தார்கள். தேவையில்லாமல் எதையும் சொல்லாதீர்கள் என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full