பெண் வன்கொடுமை புகாரில் நீட் அனிதாவின் சகோதாரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு - பின்னணி என்ன?

By subhashini · 17/2/2022

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே நீட் தேர்வுக்கு எதிராக பலர் குரல் எழுந்து வருகின்றனர். இன்னும் தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த நீட் தேர்வு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள் என பலரும் போராடி இருந்தார்கள். ஆனால், அதற்கான விடியல் வரவில்லை. அந்த வகையில் நீட் தேர்வு முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா. இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். மாநில பாடத்திட்டத்தில் தமிழ் வழியில் பயின்று பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தார். எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பது தான் இவருடைய லட்சியம் கனவு.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 196.5 கட்-ஆஃப் பெற்றிருந்ததார். இதனால் நிச்சயம் இவருக்கு மருத்துவம் படிப்பு கிடைக்கும் என்று நம்பினார். ஆனால், மத்திய அரசு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்தவுடன் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவி அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இந்த நிலையில்தன்னுடைய கனவு நிறைவேறாது என்ற கவலையில் மனமுடைந்த மாணவி அனிதா தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணம்:

பின் மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி இருந்தார்கள். நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பு படிக்க முடியாது என்ற விரக்தியால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. மாணவி அனிதாவின் இழப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கியது என்று சொல்லலாம். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடி இருந்தார்கள்.

மாணவி அனிதாவின் இரண்டாவது அண்ணன் செய்த செயல்:

இருந்தும் நீட் தேர்வுக்கு ஒரு முடிவு வரவில்லை. இன்னும் அனிதாவை போல் பலபேர் தற்கொலை செய்து கொண்டார்கள். இருந்தும் தமிழகத்திற்கு நீட் தேர்வுக்கு விடை கிடைக்கவில்லை. இந்நிலையில் மறைந்த அனிதாவின் அண்ணன் ஒரு பெண்ணை வம்பிழுத்து அவரை தாக்கியதால் சிறையில் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த மாணவி அனிதாவின் இரண்டாவது அண்ணன் அருண்குமார். குலம்பூர் பகுதியில் பெரிய நகர் தெருவில் வசித்து வருபவர் செந்தில்-வசந்தி தம்பதி.

பெண் ஒருவரை வம்பிழுத்த அனிதாவின் அண்ணன்:

சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த வசந்தியை பைக்கில் வந்த அருண்குமார் பைக்கை மேலே ஏற்றுவது போல செய்து வசந்தியை பயமுறுத்தி இருக்கிறார். இது முதல் தடவை அல்ல. இதற்கு முன் ஏற்கனவே அருண்குமார் பலமுறை செய்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தி தன்னுடைய கணவர் செந்திலிடம் சொல்லி இருக்கிறார். பின் கடும் கோபம் கொண்ட செந்தில் அனிதாவின் அண்ணன் அருண்குமார் இடம் சண்டை போட்டு இருக்கிறார். உடனே இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி இருக்கிறது. பின் அருண் குமார், வசந்தி மற்றும் செந்தில் இருவரையும் தாக்கியிருக்கிறார்.

அனிதாவின் அண்ணன் கைது செய்ய காரணம்:

இதனையடுத்து போலீசாரில் இவர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். இதனடிப்படையில் செந்துறை போலீஸ் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உள்ள 4 பிரிவுகளில் மறைந்த அனிதாவின் அண்ணன் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார்கள். பின் 15 நாட்கள் இவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இப்படி தமிழகத்தின் குழந்தையாக கொண்டாடப்பட்ட அனிதாவின் அண்ணன் செய்த இந்த கோவலமான செயல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சிறந்த மாணவிக்கு இப்படி ஒரு அண்ணனா? என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full