விஜய் அண்ணா அரசியல் கொள்கை, சாதி ஒழிக்கணும் வெறி - நீயா நானா தினகரன் எஸ்க்குளுசிவ் தகவல்

By subhashini · 19/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பை எடுத்து கொண்டு இரு தரப்பினர் எதிரெதிரே அமர்ந்து காரசாரமாக விவாதம் செய்வார்கள். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் ஜாதி வெறியை மையமாக வைத்து விவாதம் நடந்திருந்தது. அதில் ஜாதி வெறி என்பது தீயை விட ஆபத்தானது. அது எல்லோரையுமே தீக்கரையாக்கும் என்று தன்னுடைய அறிவால் பயங்கரமாக பேசி இருந்தவர் வீரச்செல்வி.

https://www.youtube.com/watch?app=desktop&v=yIf-B9WaUQU

மேலும், அந்த நிகழ்ச்சியில் ஜாதியை பெருமையாக பேசியவர் தான் தினகரன். இவர் நாங்கதான் ராஜ பரம்பரை என்று சாதி பெருமையை பேசி ராஜநடை போட்டிருந்தார். இவரை சோசியல் மீடியாவில் நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கரமாக வைத்து செய்திருந்தார்கள். இது தொடர்பாக வீர செல்வி கூட பேட்டியெல்லாம் அளித்திருந்தார். தற்போது தன்னுடைய குணத்திலும் செயலிலும் மாற்றம் காண்பித்து வீரநடை போட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன். ஜாதி எல்லாம் முக்கியமில்லை என்பதை தவிர்த்து பிறப்பால் அனைவரும் சமம் என்பதற்கேற்ப தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தினகரன்.
இவருடைய இந்த மாற்றத்தை தான் பலருமே பாராட்டி வருகிறார்கள்.

நீயா நானா தினகரன் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டையில் தினகரன், என்னுடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம். என்னுடைய அப்பா விவசாயி. எனக்கு இரண்டு அக்கா, ஒரு அண்ணன். கடைக்குட்டி தான் நான். பத்தாவதில் நான் பெயில் ஆகிவிட்டேன். ஐடிஐ படித்திருக்கிறேன். படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் போட்டோகிராபராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ரொம்ப பிற்படுத்தப்பட்ட சமூகம். எங்களை மேலே இருக்கிற ஆதிக்க ஜாதிக்காரர்கள் அடிமைப்படுத்தினார்கள். ஜாதி பிரச்சனை எல்லாம் நடந்திருக்கிறது. அப்போ எங்க ஜாதிக்காரர்கள் எனக்கு உதவி செய்தார்கள். அப்போதான் நம்ம ஜாதிக்கும் வீரம் இருக்கு. ஜாதிக்கும் ஒரு வரலாறு இருக்கு என்று நினைத்து தான் ஒரு ஜாதி கட்சியில் சேர்ந்தேன்.

சாதி பற்றி சொன்னது:

ஆதிக்க ஜாதியினர் எங்களை அடிமைப்படுத்தினதால் நாங்களும் ஆண்ட பரம்பரை தான் என்று தெரியணும்னு நீயா நானா நிகழ்ச்சியில் அப்படி பேசினேன். அப்படி பேசினதிலிருந்து என்னை நிறையவே கிண்டல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். வாங்க ராஜ பரம்பரை என்றெல்லாம் சொல்லி என்னை கூப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் ராஜ பரம்பரை என்ற வார்த்தையை கேட்டாலே மண்டை வெடிக்கிற மாதிரி ஆகிவிட்டது. என் நண்பரோட அம்மா என்னிடம் பாசமாக பேசுவார்கள். ஆனால், நான் இப்படி பேசுனதிலிருந்து அவர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். எந்த அடைமொழியை கெத்து, பெருமை என்று நினைத்தேனோ அந்த அடைமொழி என்னை வெற்றாகி வெறுமையாக்கி விட்டது.

https://www.youtube.com/watch?v=apjBw7pYzwU

மாற்றத்திற்கு காரணம்:

ஒரு கட்டத்தில் ஜாதியால் ஒரு புண்ணியமும் இல்லை என்று நானே மனப்பூர்வமாக உணர ஆரம்பித்துவிட்டேன். அதோட வெளிப்பாடுதான் நான் நீயா நானாவில் மீண்டும் கலந்து கொண்டு பிறப்பால் அனைவரும் சமம் என்று பேசினேன். இன்னும் சொல்லப்போனால் இதற்கு முன்னாடி ஜாதி வெறியோடு இருந்தேன். இப்ப நான் ஜாதியை ஒழிப்பதில் வெறியாக இருக்கிறேன். பழையபடி என்னுடைய எல்லா ஜாதி நண்பர்களுமே பேச ஆரம்பி விட்டார்கள். அந்த வார்த்தைக்கு இவ்வளவு சக்தி இருக்குமா என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இனிமேல் அம்பேத்கர், பெரியார் வழியில் தான் பயணிப்பேன். விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைந்திருக்கிறேன். விஜய் அண்ணாவை சின்ன வயதில் இருந்து பிடிக்கும். தமிழ்நாட்டில் விஜய் அண்ணாவால் மட்டும்தான் ஜாதி வெறி, மதவெறி இல்லாமல் ஆட்சியை கொடுக்க முடியும். அதுவும் விஜய் அண்ணா அம்பேத்கர், பெரியாரை தன்னோட கொள்கை தலைவர்களாக வைத்திருக்கிறார்.

விஜய் அரசியல்:

அதெல்லாம் தான் விஜய் அண்ணா மீது எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆகி அவருடைய கட்சியில் சேர்ந்ததற்கு காரணம். மேலும் வீர செல்வி அக்கா அறிவுரை சொன்னது, எல்லோரும் என்னை ட்ரோல் பண்ணறது எல்லாமே 50 சதவீதம் காரணமாக இருந்தாலும், விஜய் அண்ணா கொள்கையை ஏற்றுக் கொண்டதும் நான் மாறுவதற்கும் முக்கிய காரணம். தமிழக வெற்றிக் கழகத்தில் நான் சேர்ந்ததும் பழைய கட்சிகளில் என்னை சேர சொல்லி கூப்பிட்டார்கள். காசெல்லாம் தருவதாக சொன்னார்கள். நான் எதுக்குமே போகவில்லை. திமுக பெண்களுக்கு நல்லாட்சி கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓசி பஸ்ஸில் போறீங்கன்னு பெண்களை அவமதிக்கிறார்கள். நான் இதற்கு முன்னாடி திமுகவுக்கு ஓட்டு போட்டுக் கொண்டிருந்தேன். எந்தவித மாற்றமும் வரவில்லை. திமுக ஆட்சியில் தான் நிறைய ஜாதி கொடுமை எல்லாம் நடக்கிறது. ஆணவ படுகொலைகளும் நடக்கிறது. அதிமுக ஆட்சியும் கிட்டதட்ட இதே மாதிரி தான். பாமகவை பற்றி சொல்லவே வேணாம். எங்க கிட்ட சண்டைக்கு வந்து அடிமைப்படுத்தினதே அவங்க தான். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை விஜய் அண்ணாவால் தான் கொடுக்க முடியும். அதனால் அவர் வழியில் தான் பயணிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full