நான் சும்மா தான் சொன்னேன், என்ன மன்னிச்சிடுங்க - லைவ்வில் கணவரிடம் மன்னிப்பு கேட்ட நீயா நானா மனைவி.

By Arun · 13/9/2022

கடந்த இரண்டு வாரமாக நீயா நானா நிகழ்ச்சி தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா ஆண்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிரான இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் வேலைக்கு அமர்த்திய குடும்ப தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருந்தது. அந்த எபிசோடில் கோபிநாத்தின் பேச்சும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பேச்சும் பலரை நெகிழிச்சியில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பகி இருந்தது.

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள்

அந்த எபிசோடில் கோபிநாத்தின் பேச்சும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பேச்சும் பலரை நெகிழிச்சியில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார். இதுகுறித்த பேசிய அந்த பெண்ணின் கணவர் 'நான் பள்ளியில் படிக்கும் போது  7 மார்க், 8 மார்க்னு வாங்குவேன்.

படிக்காத தந்தையின் ஏக்கம் :

ஆனால், என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன்' என்று கூறி வெகுளியாக கூறி இருந்தார்.தன் மகள் வாங்கிய மதிப்பினை ஒரு அப்பன் ஒரு மணி நேரம் பார்க்கிறானே அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெண்ணை கோபிநாத் கேட்டதற்கு அவர் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார். அவர் இன்னும் 90ஸ்ல தான் இருக்கார் என்று கேலி செய்ய உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார்.

ஹிட் அடித்த எபிசோட் :

மேலும், அந்த மகளிடம் உன் அப்பா இன்னும் தோற்கவில்லை என்று கூற அதற்கு அந்த மகளும் என் அப்பா தோற்கவில்லை, அவர் எனக்காக தான் கஷ்டப்படுகிறார் என்று கண்ணீர் மல்க கூறியது பலரை கண்ணீரில் ஆழ்த்தியது. இந்த எபிசொட் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சூப்பர் அப்பா என்று பலரும் அந்த தந்தையை பாராட்டி வருகின்றனர். அதே போல தன் கணவரை ஏளனம் செய்த அந்த பெண்ணை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=IdRZhJK96R4&t=10881s

கணவன் மனைவி பேட்டி :

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கணவன் மனைவியை youtube சேனல் ஒன்று பேட்டி கொண்டிருக்கிறது அந்த பேட்டியில் பேசிய அந்தக் கணவரின் மனைவி இந்த நிகழ்ச்சியில் தான் இவர் மனதிற்குள் இவ்வளவு விஷயங்களை வைத்திருக்கிறார் என்பதை எனக்குத் தெரியும் ரேங்க் கார்டு விஷயத்தை எல்லாம் அவர் இந்த நிகழ்ச்சிகளில் தான் என்னிடம் சொன்னார் அவருக்கு தான் சம்பாதிக்கவில்லை என்ற எண்ணம் இருக்கிறது அதனால் தான் அப்படி பேசி விட்டார் என்று கூறியிருக்கிறார்."நாங்கள் அப்படியே தான் இருப்போம், இது ஷோ என்பதால் தான் உங்களுக்கு அப்படி தெரிகிறது" என்று கூறியதோடு அந்த பேட்டியில் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அதே போல அந்த பேட்டியில் பேசிய இவர்களின் மகள் 'என் அம்மா தெரியாமல் தான் பேசினார். அவரை Troll செய்வதை பார்க்கையில் கஷ்டமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full