தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் என்ற சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது.இதனால் நெல்சனை பயங்கரமாக விமர்சித்து ட்ரோல் செய்திருந்தார்கள். இன்னொரு பக்கம் சினிமாவில் லோகேஷ் உடைய வளர்ச்சி நன்றாக இருந்ததால் அவருடன் நெல்சனை ஒப்பிட்டு எல்லாம் விமர்சித்து இருந்தார்கள்.

Advertisement

நெல்சனை தாழ்த்தியும் லோகேஷை உயர்த்தியும் பேசி சோசியல் மீடியாவில் மீம்ஸ் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் நெல்சனுக்கு காம்பேக் கொடுக்கும் விதமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்தது. நெல்சனின் முந்தைய படமான விஜயின் பீஸ்ட் படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், பல முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

Advertisement

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த பாடம் வசூலை வாரி குவித்து வருகிறது. இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது வார முடிவில் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக மீண்டும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Advertisement

ஏற்கனவே ரஜினி நடித்த 2.0 திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இந்த நிலையில், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அதில் ரஜினிக்கு, கலாநிதி மாறன் காசோலை வழங்கினார். இப்படி ஒரு நிலையில் நெல்சனுக்கு Porsche கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார் கலாநிதி மாறன். இந்த ரக கார் ஜெர்மனில் உற்பத்தி செய்து இறக்கு மதி செய்யப்படும் Impoted ரக கார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் நெல்சனுக்கு பலரும் வாழ்த்துக்களை குவிந்து வரும் நிலையில் நெல்சன் பீஸ்ட் படத்திற்கு பின்னர் விருது விழாவில் கலந்துகொண்ட போது அவமதிக்கப்பட்டதாக வைரலான வீடியோவை பலரும் பகிர்ந்து ஜெயிச்சிட்ட நெல்சன் என்று கூறி வருகின்றனர். மேலும், நெல்சனை கொண்டாடும் வகையில் ரஜினி பேசிய பேச்சுக்களை எல்லாம் வைத்து எடிட் செய்து வருகின்றனர்.

Advertisement