நெல்சனுக்கு கிடைச்ச மாதிரி மனைவி கெடச்சா போது - ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து வைரலாகும் நெல்சன் மனைவியின் மீம்ஸ்கள்.

By Rajkumar · 9/8/2023

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஒருவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைடராக பணியாற்றி வந்த நெல்சன் விஜய் டிவியின் ஒல்லி பெல்லி, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர், ஒன் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குழுவில் பணியாற்றி வந்தார். இவர் முதன்முதலாக சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து 'வேட்டை மன்னன்' என்ற படத்தை எடுப்பதாக இருந்தது இந்த திரைப்படத்தின் பணிகள் துவங்கப்பட்டு படப்பிடிப்புகள் கூட நடைபெற்றது.

View this post on Instagram

A post shared by AR))) vibezz (@arvibezz)

ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன்பின்னர் இவர் நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கோலமாவு கோகிலா' என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இவர் எடுத்த 'டாக்டர்' படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால், இறுதியாக இவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் இவர் விஜய் ரசிகர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் ரஜினியை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியான போதே இந்த படமும் flop தான் என்று பலர் கேலி செய்தனர். இப்படி ஒரு நிலையில் நெல்சன் குறித்து ஜெயிலர் இசை வெளியீட்டுவிழாவில் ரஜினி பேசிய விஷயம் வைரலானது.

இந்த விழாவில் பேசிய ரஜினி 'நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு கதை பிடித்திருந்தது. பின் அவர் பீஸ்ட் சூட்டிங் முடிந்து பத்து நாட்களில் விரிவாக கதை சொல்வதாக சொன்னார். பத்து நாளைக்கு பின் பீஸ்ட் சூட் முடிந்து வந்து கதையை சொன்னார். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. ப்ரோமோசூட் செய்து படத்தை அறிவித்தோம். அதற்கு பிறகு தான் பீஸ்ட் வெளியானது. பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் படம் சரியாக போகவில்லை. இயக்குனரை மாற்ற வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் எல்லாம் என்னிடம் சொன்னார்கள்.

நாங்கள் அனைவரும் சன் டிவி குழு உடன் ஒரு சந்திப்பு நடத்தினோம். பின் சன் டிவி டீம், விமர்சனங்கள் மோசமாக இருந்தது உண்மை தான். ஆனால், வசூல் நஷ்டம் இல்லை, பாக்ஸ் ஆபிஸில் நன்றாக தான் இருந்தது என்றெல்லாம் கூறினார்கள் என்று பேசி இருந்தார். மேலும், இந்த விழாவில் ரஜினி, நெல்சனை பற்றி பேசிய போதெல்லாம் நெல்சன் பின்னால் அமர்ந்து இருந்த பெண் பெருமைகொண்ட முகத்துடன் அடிக்கடி கைதட்டிக் கொண்டு இருந்தார்.

பின்னர் தான் தெரிந்தது அது நெல்சனின் மனைவி என்று. அதே போல இந்த விழாவில் ரஜினி எப்போதும் ஒரு இயக்குனர் தோற்பது இல்லை, அவர் எடுக்கும் சப்ஜெடக்ட் தான் தோற்கும் என்று சொன்னார்.அப்போது நெல்சன் பின்னால் இருந்த நெல்சனின் மனைவி கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. அதே போல நெளசனுக்கு அமைந்தது போன்ற மனைவி அமைவதெல்லாம் வரம் என்ற அளவிற்கு நெல்சன் மனைவியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும், நெல்சன் மனைவி குறித்து வைரலாக பரவி வரும் மீம்களை எல்லாம் நெல்சன் மனைவிக்கே டேக் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full