கடைசியா நான் அவரை பார்த்த போது - அமெரிக்காவில் இருந்து இரங்கல் தெரிவித்த நெப்போலியன்

By Rajkumar · 28/12/2023

கேப்டன் விஜயகாந்த் இறப்பு குறித்து கண்ணீர் விட்டு நடிகர் விஷால் பதிவிட்டு இருக்கும் இரங்கல் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கேப்டனின் இறப்பு குறித்து நடிகர் நெப்போலியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=YT91oG_UjYY

அதில்' உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்.தேமுதிக தலைவரும், கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். மிகவும்வேதனையும், வருத்தமும் அடைந்தோம். சகோதரி குஷ்பு, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா என்னை தொலைபேசியில் அழைத்து, விஜயகாந்த் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்.

இன்னும் அதிக நாட்கள் இருந்து திரைப்படத்துறைக்கும் நமது நாட்டுக்கும் நிறைய செய்ய வேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம். அவருடன் நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள்,நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் போன்ற செயல்களை நண்பர் சரத்குமாரும், நானும் உடனிருந்து கடினமாக உழைத்து வெற்றி கண்டு, கடந்து வந்த பாதைகளை எல்லாம் எங்களால் என்றும் எதையும் வாழ்நாளில் மறக்க இயலாது.

View this post on Instagram

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது, அவரைச் சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல்நலம் விசாரித்தது, மகிழ்வுடன் பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது, இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போலிருக்கிறது. வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர் அவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் அவரது ரசிகர்களுக்கும்.

தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்' என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full