யூடியூபர் இர்ஃபான் வீட்டிற்கே சென்று மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்த நடிகர் நெப்போலியன் - திருமணம் எந்த நாட்டில் தெரியுமா?

By Rajkumar · 16/7/2024

நடிகர் நெப்போலியன் யூடியூபர் இர்ஃபானை நேரில் சந்தித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியன் மூத்த மகன் குணால் மஸ்குளர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை திசைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் நெப்போலியன் மூத்த மகன் தனுஷிற்கு திருமணமாக இருக்கிறது. தற்போது தனுஷிற்கு 25 வயது ஆனதால் நெப்போலியன் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார். சமீபத்தில் தான் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனால் இந்த நிச்சயதார்த்த பத்திரிகையை நெப்போலியன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கொடுத்திருந்தார். இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

நெப்போலியன் வீட்டு விசேஷம்:

மேலும், தனுஷின் உடல்நிலை பிரச்சினை காரணமாக அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது. இதனால் நெப்போலியன் தன்னுடைய குடும்பத்துடன் இந்தியா வந்திருக்கிறார். நெப்போலியன் வருங்கால மருமகள் பெயர் அக்ஷயா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். அங்கு மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள்தான் அக்ஷயா. இவரைத்தான் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் செய்ய இருக்கிறார்

https://www.youtube.com/watch?v=xBzSzw_vKVo

தனுஷ் நிச்சயதார்த்தம்:

அதோடு தனுஷால் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ காலின் மூலம் நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. இதைப் பார்த்து பலரும் தனுஷிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் திருமணம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நெப்போலியன் வீட்டு திருமணத்தில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூடியூபர் இர்ஃபான்:

இந்நிலையில் திருமண பத்திரிக்கை வைக்கும் பணியிலும் நெப்போலியன் மற்றும் அவரின் மனைவி மும்மரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், நெப்போலியன் மகன் தனுஷ் பிரபல யூடியூபர் இர்ஃபானின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் ஏற்கனவே இர்ஃபானை அமெரிக்க அழைத்து கவுரவித்த நெப்போலியன், தற்போது இர்ஃபான் வீட்டிற்கு நேரில் சென்று திருமண பத்திரிகை வைத்துள்ளார். தற்போது அந்த பத்திரிக்கையை தன்னுடைய யூட்யூப் மூலம் இர்ஃபான் காட்டியுள்ளார்.

தனுஷ் திருமணம்:

அதில், தனுஷ் - அக்ஷயா திருமணம் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ளதையும் இர்ஃபான் உறுதி செய்துள்ளார். திருமணப் பத்திரிக்கையுடன் சேர்த்து அனைவருக்கும் ஒரு வெள்ளி கிண்ணம் ஒன்றையும், நட்ஸ் அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் நெப்போலியன் குடும்பத்தினர் பரிசாக கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இர்ஃபானைத் தொடர்ந்து மேலும் பல பிரபலங்களுக்கு நெப்போலியன் குடும்பத்தினர் அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full