50 லட்சம் தானம், ஐம்பொன் அடங்கிய பரிசு - மனைவியின் 50வது பிறந்தநாளை பிரம்மான்டமாக கொண்டாடிட நெப்போலியன்.

By ·

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். இவருடைய உண்மையான பெயர் குமரேஷன் துறைசாமி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகினர். அதற்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

1991ஆம் ஆனது சினிமாவில் நுழைந்த நெப்போலியன் பின்னர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பெரம்பலூர் தொகுதியில் எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பிறகு அமைச்சராகவும் பணியாற்றினார். ஒரு கடத்தில் மூடுவதுமாக திரைப்படங்களில் நடிப்பை நிறுத்திய அவர் பின்னாளில் அமெரிக்காவில் 12000 சதுர அடியில் கால்பந்து மைதானம், திரையரங்கு, லிப்ட் வசதிகள் என நவீன வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் நெப்போலியனின் அமெரிக்காவில் உள்ள வீடு குறித்தும் அவர் திருநெல்வேலியில் கட்டியிருக்கும் மருத்துவமனை குறித்தும் சில வீடியோ பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் பிரபல உணவு மதிப்பு யூடியூபர் இப்ப்ரான் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் நெப்போலியனை பற்றி பல வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் நெப்போலியன் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=qzn5plzoFy4

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் `தான் 23 வருடங்களாக மென்பொருள் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஆனால் தனக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது என்றும் நானும் என்னுடைய மனைவியும்தான் அந்த நிறுவனத்தை பார்த்து வருகிறோம் என்றும் கூறியிருந்தார்.மேலும் தன்னுடைய மகனுக்கு 10 வயதில் நடக்க முடியாமல் போனதால் திருநெல்வேலி அருகே பாரம்பரிய மருத்துவம் செய்து வந்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் தன்னுடைய மகனை போல பலர் வந்திருந்தார்கள் ஆனால் அவர்கள் தங்க போதிய இடவசதி இல்லை. அதனை பார்த்து தன்னுடைய மகன் அப்போது பல யோசனைகளை கூறியதாகவும் அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார். மேலும் தன்னுடைய மகனுக்கு கிடைத்த உயந்த சிகிச்சை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று திருநெல்வேலியில் ஒரு மருத்துவமனை கட்டிக்கொடுத்துள்ளார், அதோடு இங்கு சிகிச்சை அளிப்பதற்கு பணம் வசூலிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய மனைவியின் பிறந்தநாள் விழா சமீபத்தில் அங்குள்ள நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது பேசிய அவர் என்னுடைய மனைவிக்கு 50 பவுன் தங்கம் போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால், இந்தியாவில் இருந்து தங்கம் கொண்டுவர முடியாததால் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full