இணையத்தில் வைரலாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய போஸ்டர்.!

By Rajkumar · 2/4/2019

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் படங்களை இயக்கிய வினோத்இயக்கி வருகிறார்.  

இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைகிறார். இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘பிங்க்’ படத்தில் ரீமேக் என்பது அனைவருக்கு தெரியும்.

இதையும் படியுங்க : மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி, விஜய் மற்றும் பலர்.! புகைப்படங்கள் இதோ.! 

மேலும், இந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களின் விவரம் ஏற்கனவே வெளியான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு தற்போது இந்த படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போஸ்டரை அஜித் ரசிகர்களே உருவாக்கியுள்ளனர். இருப்பினும் இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full