ஜகமே தந்திரம் ட்ரைலரை ரீ-கிரியேட் செய்த வெளிநாட்டு சிறுவர்கள் - அசந்து போன Netflix. வீடியோ இதோ.

By Rajkumar · 8/6/2021

ஜகமே தந்திரம் ட்ரைலரை அச்சு அசலாக ரீ-கிரியேட் செய்த சிறுவர்களின் வீடியோவை netfix நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரனாக திகழ்ந்து வரும் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான 'கர்ணன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தணுஷ், ஹாலிவுட்டில் கிரே மேன், தமிழில் கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வாகிரகவானுடன் 'ஆயிரத்தில் ஒருவன் 2', இந்தியில் ஒரு படம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

https://twitter.com/NetflixIndia/status/1401891441777909763

இதில் தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் முக்கியமானப் படம் `ஜகமே தந்திரம்'. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.2016 ஆம் ஆண்டு துவங்கிய இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்து கடந்த ஆண்டு மே 1-ம் தேதியே ரிலீஸுக்கு நாள் குறிக்கப்பட்ட இப்படம் கொரோனா லாக்டெளன் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது.

இதையும் பாருங்க ; மஞ்சுமாவை இதுவரை நீச்சல் உடையில் பார்த்துள்ளீர்களா ? தற்போது வைரலாகும் Throwback புகைப்படம்.

பிப்ரவரி 12-ம் தேதி தியேட்டர் ரிலீஸ் என முதலில் முடிவெடுத்து தயாரிப்புத் தரப்பு தனுஷுக்கு தகவல் சொன்னது. ஆனால், இடையில் நேரடி ஓடிடி ரிலீஸுக்காக நெட்ஃபிளிக்ஸில் பேச்சுவார்த்தைகள் நடக்க அதிருப்பதியானார் நடிகர் தனுஷ். மேலும், `தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புகிறேன்'' என நடிகர் தனுஷ் ட்வீட்போட இந்த படத்தில் திரையரங்கில் வெளியிட பல்வேறு முயற்சிகள் நடந்தது. இருப்பினும் இந்த படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

திரையரங்கில் வெளியாக வேண்டிய படம் Netfilx-ல் வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் பலரும் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் Netflix நிறுவனம் இந்த படத்தை வேற லெவலில் ப்ரோமோஷன் செய்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை அச்சு அசலாக ரீ-கிரியேட் செய்த சிறுவர்களின் வீடியோவை Netflix நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, சூப்பர்ரா தம்பி சூப்பர்ரா என்று பாராட்டியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full