காமெடி என்ற பெயரில் எல்லை மீறி போறீங்க - VJ சித்துவிற்கு அட்வைஸ் செய்யும் அவரின் ரசிகர்கள்
விஜே சித்துவின் லேட்டஸ்ட் வீடியோவை நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை எல்லோருமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வித்தியாசமான புதுப்புது செயலிகளுமே அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடுயூப் சேனலின் பயன்பாடு தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லோருமே தனியாக சேனலை தொடங்கி தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஜே சித்து. இவர் தினமும் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தத்துடன், காமெடி கலந்த நக்கல் பாணியில் வீடியோக்களாக யூடியூப் இல் பதிவிட்டு வருகிறார்.
விஜே சித்து யூட்யூப் சேனல்:
இதனாலே இவர் சீக்கிரமாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார். இவரது சேனலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாலோ செய்து இருக்கிறார்கள். இவர் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்குப் பின்னர் இவர் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக சேவை சார்ந்த வீடியோக்களெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் இவர் நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.
Worstடா டேய். காமெடின்ற பேர்ல எல்லை மீறி போயிட்டு இருக்கான் vj siddhu🤦♀️ pic.twitter.com/IpeIJbRiZT
— Filmgasm🎬🧢 (@Nithya_vin) February 8, 2025
விஜே சித்து குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகியிருந்தது. அதனை தொடர்ந்து இவர் சமூக சேவை தொடர்பாக சிந்தனை சேய் வித் சித்து என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருந்தார். அதற்குப் பின் 2019 ஆம் ஆண்டு ஜெயா டிவியில் கில்லாடி ராணி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
There was a time I loved all the videos of VJ Siddhu Vlogs used to check every alternate days 3PM for videos but now it's going overboard .
— Monesh (@MoneshMj) February 8, 2025
Doing things for fun is okay but this isn't... pic.twitter.com/psdoDT3XVc
விஜே சித்து வீடியோ:
அதற்குப்பின் இவர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி விஜே சித்து வ்லாக்ஸ் என்று பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவருடைய வீடியோ எல்லாம் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் தினமும் போடும் இவருடைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது விஜே சித்து போட்டிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.
VJ Siddhu's behaviour is worsening in every vlog... Fame irukku nu enna vena panalama ah... Ppl should not take this on a lighter note...
— Josh (@HomelanderBale) February 8, 2025
What's the use of the donation if you don't respect ppl around you... #BringBackCancle culture to tamil YT community.. pic.twitter.com/KGktvAQqew
நெட்டிசன்கள் கண்டனம்:
அதாவது, இவர் காமெடி என்ற பெயரில் ஒரு நபரை துரத்தி துரத்தி அடித்து இருக்கிறார். அந்த நபரின் ஆடையை கழட்டி ரொம்ப மோசமாக சித்து தாக்கி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோவிற்கு பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதில் சிலர், காமெடி என்று நீங்கள் பண்ணும் வீடியோக்களை எல்லாம் பிடிக்கும். ஆனால், இவ்வளவு மோசமாகலாம் செய்யத் தேவையில்லை. எதற்கு இவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை செய்கிறீர்கள்? என்றெல்லாம் சித்துவை திட்டி விமர்சித்து வருகிறார்கள்