உங்கள் மகள் மட்டும் காவி பிகினி அணியலாமா ?காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனரை வருந்தெடுக்கும் நெட்டிசன்கள்.

By Manikandan · 31/12/2022

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். ஷாருக்கானின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இந்த படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது.

இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு பதான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது.சமீபத்தில் பதான் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறத்தில் படு கவர்ச்சியாக உடை கதாநாயகனான ஷாருக்கான் பச்சை நிறம் அணிந்தும் நடனமாடி இருந்தனர்.

பாடல் குறித்த சர்ச்சை:

இதனால் இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இது கருத்து மத்திய பிரதேச அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா, இந்த பாடலில் சில காட்சிகள் தவறான மனநிலையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அவற்றை நீக்க வேண்டும். இல்லையென்றால் இந்த படம் மத்திய பிரதேசத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும். எங்கள் மாநிலத்தில் வெளியிடலாமா? வேண்டாமா? என்பதை பற்றி நாங்கள் தான் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், பாஜக தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் பலரும் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மத்திய பிரதேசத்தில் ஷாருக்கானின் உருவ பொம்மைகளை போராட்டத்திலும் இந்து அமைப்பினர் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் இப்படத்திற்கு கண்டத்தை தெரிவித்தவர்களில் ஒருவர் "தி காஷ்மீர் ஃபபைல்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிகோத்தரி. இவர் பதான் படத்தில் வரும் காட்சிகளை குறித்து கருத்து கூறிய நிலையில் நடிகர் ஷாருக்கானின் ரசிகர்கள் இவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

அந்த வகையில் இயக்குனர் விவேக் அக்னிகோத்தரியின் மகள் இன்ஸ்டாகிராமில் காவி பிகினி உடையையுடன் புகைப்படத்தை பதிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி உங்களுடைய மகள் மட்டும் காவி உடையில் பிகினி அணியலாமா? என சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் விவேக் அக்னிகோத்தரி மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை மறைத்துள்ளார். மேலும் விவேக் அக்னிகோத்தரி இயக்கிய படங்களில் ஆபாசமான காட்சிகளும், உடை இல்லாமல் இருக்கும் காட்சிகளும் இருப்பதாக ஷாருக்கானின் ரசிகர்கள் இயக்குனர் விவேக் அக்னிகோத்தரியை கடுமையாக விமர்சித்து திட்டி வருகின்றனர். .

Tamil Behind Talkies AMP · Quick view
View full