மிருகத்த பாத்து கூட அவர் பயந்து இருக்கா மாட்டார் - பேர் கிரெல்ஸ்ஸிற்கு சரமாரியாக முத்தம் கொடுத்த ரன்வீர். கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

By subhashini · 12/7/2022

பியர் கிரில்ஸ் உடன் ரன்வீர் சிங் சாகச பயணம் மேற்கொண்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப் படத்தின் மூலம் தான் பாலிவுட் திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

https://twitter.com/Rurush18/status/1546472923241799680

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனிடையே இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ரன்வீர் சிங் படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் அவர்கள் பியர் கிரில்ஸ் உடன் சாகச பயணம் மேற்கொண்டிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பியர் கிரில்ஸ் பற்றிய தகவல்:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சாகச விரும்பி பியர் கிரில்ஸ். இவர் எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் தன்னுடைய தொலைக்காட்சி தொடரான மேன் வெர்சஸ் வைல்ட் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

https://twitter.com/ReasLog/status/1546458475374727170

பியர் கிரில்ஸ் சாகச பயணம்:

அது மட்டுமில்லாமல் மிக சிறிய வயதில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பிரிட்டிஸ் நபர்களில் இவரும் ஒருவர் ஆவார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு காடுகள், பாலைவனங்கள் போன்றவற்றில் பியர் கிரில்ஸ் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் காட்டில் பயணம் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் போன்ற பல பிரபலங்கள் காட்டுக்குள் சாகசம் செய்த வீடியோக்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.

https://twitter.com/vinayp2000/status/1546428803336966145

ரன்வீர் சிங் சாகச பயணம்:

இந்நிலையில் தற்போது இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங் கரடிகளிடம் இருந்து தப்பித்து கடுமையான நில நிலப்பரப்புகளை துணிச்சலாக எதிர்கொண்டு இருக்கிறார். பின் இவர் தன் காதல் மனைவிக்காக காடுகளிலிருந்து உயிர் பிழைக்கும் போது ஒரு அரிய பூவைத் தேடி சைபிரியன் காட்டிற்கு செல்கிறார்.

https://twitter.com/unpopfemcoder/status/1546518815260823552

ரன்வீர் சிங்- பியர் கிரில்ஸ் வீடியோ:

மேலும், இந்த சாகச நிகழ்ச்சி 90 நிமிடம் ஆகும். இதில் ரன்வீர் சிங்கின் நகைச்சுவை மற்றும் ஆற்றல் நிறைந்து காணப்படுகிறார். இப்படி ஒரு நிலையில் ரன்வீர் சிங்- பியர் கிரில்ஸ் உடைய சின்ன கிளிப் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ரன்வீர் சிங் அவர்கள் பியர் கிரில்ஸ் கண்ணத்தில் சரமாரியாக பலமுறை முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டல், கேலி செய்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full