நாகார்ஜூனா, தனுஷை தொடர்ந்து மீண்டும் ஏர்போர்ட் சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி- வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்

By subhashini · 1/8/2024

ஏர்போர்ட்டில் ஊழியரை சிரஞ்சீவி தள்ளிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் ஏர்போர்ட்டுக்கு வந்தாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அதுமட்டுமில்லாமல் அவர்களுடன் சேர்ந்து ரசிகர்கள் புகைப்படம், வீடியோக்களை எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து விடுவதால் பல பிரபலங்கள் உடைய வீடியோக்கள் வைரலாகி இருக்கு.

அதில் சில வீடியோக்கள் சர்ச்சையாகி இருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு பிரபலங்கள் ஏர்போர்ட்டுக்கு வரும் வீடியோ தான் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்ஜுனா அவர்கள் ஏர்போர்ட் வந்திருந்தார். அப்போது அவர் அருகில் ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க சென்றிருந்தார். உடனே நாகர்ஜுனா பாதுகாவலர் அவரைத் தள்ளிவிட்டு இருந்தார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாகர்ஜுனா அமைதியாக வந்துவிட்டார்.

நாகார்ஜுனா வீடியோ:

அந்த வீடியோ தான் இணையத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அதை பார்த்த பலருமே, நாகர்ஜுனாவை கண்டித்து இப்படியெல்லாம் நடந்து கொள்வதா? என்று திட்டியும் இருந்தார்கள். அதற்கு பின் நாகர்ஜுனா, நான் அதை கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு பின் அந்த நபரை நேரில் சந்தித்தும் நாகார்ஜுனா பேசி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=SbMEVpJK4w4

தனுஷ் வீடியோ:

இதை அடுத்து தனுஷ் கடந்தமாதம் ஜுஹு பீச்சில் சூட்டிங்க்காக சென்று இருந்தார். அவர் நடந்து வரும் போது ரசிகர்கள் போனில் அவரை போட்டோ எடுக்க முயன்று இருந்தார்கள். பின் தனுஷுடன் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை தள்ளிவிட்டு இருந்தார்கள். அதை தனுஷும் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள், பொது இடத்தில் சூட்டிங் நடந்தால் மக்களை இப்படித்தான் நடத்துவீர்களா? உங்கள் மீது இருக்கும் பிரியத்தில் தானே வருகிறார்கள்.

சிரஞ்சீவி வீடியோ:

இப்படி எல்லாம் கொஞ்சம் கூட ஏன் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள்? என்றெல்லாம் கண்டித்து இருந்தார்கள். இந்த சர்ச்சை ஓய்ந்து முடிவதற்க்குள் ஏர்போர்ட்டில் நடிகர் சிரஞ்சீவி விவகாரம் தான் தற்போது இணையத்தில் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் சிரஞ்சீவி அவர்கள் சமீபத்தில் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த ஊழியர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க பின்னாடியே வந்திருக்கிறார்.

நெட்டிசன்கள் கண்டனம்:

அதை கண்டு கொள்ளாமல் சிரஞ்சீவியும் நடந்து சென்றிருக்கிறார். அந்த ஊழியரும் சிரஞ்சீவி பின்னாடியே சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சிரஞ்சீவி அந்த நபரை தள்ளிவிட்டு சென்றிருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே சிரஞ்சீவியின் செயலை திட்டியும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full