பழைய வீடியோவால் எழுந்த சர்ச்சைக்கு மத்தியில் போர் நினைவிடத்திற்கு சென்று சாய் பல்லவி செய்த விஷயம்
தேசிய போர் நினைவிடத்தில் நடிகை சாய் பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்தியா சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த போராட்ட சம்பவங்கள், வீர செயல்கள், குடும்பம், மனைவி, குழந்தை ஆகியவற்றை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அமரன் படம்:
இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் தான் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சாய் பல்லவி, ‘பாகிஸ்தானில் இருப்பவர்கள் எல்லாம் நம் இந்திய நாட்டு ஜவான்களை தீவிரவாதிகள் என்று தான் சொல்வார்கள்.
Stop using the War Memorial as a cover to your mindset. pic.twitter.com/HTY6bRsvmg
— Sid 🇮🇳 (@sidduu96) October 28, 2024
சாய் பல்லவி வீடியோ:
ஏனென்றால், நம்மை தாக்கும் ஒருவரை நாம் அப்படித்தான் சொல்லுகிறோம். அதனால், அவர்களை தாக்குபவர்களையும் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று கூறி இருந்தார். மேலும், ‘தி காஷ்மீரி பைல்ஸ்’ படத்தில் கூட காஷ்மீர் பண்டிதரை எப்படி அவர்கள் கொன்றார்கள் என்று காட்டினார்கள். இதை நீங்கள் மதச்சண்டையாக பார்த்தால், சமீபத்தில் கூட ஒருத்தர் தனது வண்டியில் மாட்டை வைத்துக்கொண்டு சென்றார். அவரைக் கூட சில நபர்கள் அடிக்கும்போது ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறார்கள். அதனால், அப்போ நடந்த விஷயத்திற்கும் இந்த விஷயத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
Stop doing all this drama ..
— AstroCounselKK🇮🇳 (@AstroCounselKK) October 28, 2024
You woke and leftist anti national mindset is already exposed ..
No true Nationalist will ever support you now ..
Just wait and watch how your upcoming movies get flopped bigtime ..
மதச் சண்டைகள் குறித்து சாய்பல்லவி:
நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு நல்ல மனிதரே இல்லை என்று தான் சொல்லுவேன். நீங்கள் ஒரு நல்ல மனிதனாக இருந்தால் எங்கிருந்தாலும் அங்கு நடுநிலையாகத்தான் இருப்பீர்கள் என்று பேசி இருந்தார். இதற்கு நெட்டிசன்கள் சாய் பல்லவியை விமர்சித்தும், தீவிரவாதி என்று குறிப்பிட்டும் இருந்தார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவி அவர்கள் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, அமரனுக்காக பிரமோஷன் நிகழ்வுகளை தொடங்கும் முன்பு தேசிய போர் நினைவிடத்தை பார்க்க விரும்பினேன்.
An actress went to a war memorial to pay tribute, but she posted a laughing face while claiming to be brimming with emotion.
— Khan Market Yoda (@KhanMarket_Yoda) October 28, 2024
What kind of emotion does she mean with that laughing face while paying tribute? #Saipallavi #BoycottSaiPallavi pic.twitter.com/EVLCdXCpUg
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சாய்பல்லவி:
சில நாட்களுக்கு முன்பு தான் சென்றிருந்தேன். நமக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக ஆயிரக்கணக்கான செங்கல் கட்டிடங்கள் வைக்கப்பட்டுள்ள இந்த புனித ஆலயம். மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன் என்று கூறி இருந்தார். இப்படி இவர் போட்டிருந்த பதிவை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு இவர் ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் தொடர்பாக அளித்த பேட்டி வீடியோவை பதிவிட்டு சாய் பல்லவி முழுக்க முழுக்க நடிக்கிறார். எதற்கு இந்த ட்ராமா? என்றெல்லாம் கேட்டும் வருகிறார்கள்.