இவர்கள் எல்லாம் போட்டியாளர்களா? பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்களால் கடுப்பான ரசிகர்கள்

By subhashini · 6/10/2025

தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடம் வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் முடிவடைந்து தற்போது ஒன்பதாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள்.

கேப்டனுக்கு தனி அறை, ரூமுக்குள்ளே ஜக்குசி, ஒவ்வொரு அறையிலும் வித்தியாசமான உருவங்கள், பொருட்களை எல்லாம் வைத்து இந்த முறை வாயைப் பிளக்கும் வகையில் பிக் பாஸ் வீடு இருக்கிறது. பிரம்மாண்டமாக நேற்று பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி போட்டியாளர்களுடைய அறிமுகமும் நடைபெற்று இருந்தது. ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய விவரம், டான்ஸ், கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

பிக் பாஸ் 9:

மேலும், இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

மக்கள் கோபம்:

நிகழ்ச்சி தொடங்கிய உடனே போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி பதிலடி கொடுத்திருந்தார். வீட்டுக்குள் சென்ற ஒவ்வொரு போட்டியாளர்களுமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு முதல் நாள் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் சென்று விட்டது. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற சில போட்டியாளர்களை பார்த்து மக்கள், இவர்களுக்கெல்லாம் ஏன் வாய்ப்பு கொடுக்கணும்? இவர்களெல்லாம் ஒரு தகுதியான போட்டியாளர்களா? என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள்.

விஜய் சேதுபதி விளக்கம்:

குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரோரா, திவாகர், கலையரசனை பற்றி எல்லாம் விமர்சித்திருக்கிறார்கள். இவர்கள் பற்றி ஏற்கனவே சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விஜய் சேதுபதி, பல கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு பின் தான் திவாகரை பிக் பாஸில் தேர்வு செய்திருக்கிறார்கள். இதில் மருத்துவத்துறை குறித்து குறிப்பாக அவருடைய பிசியோதெரபி துறை குறித்து கேட்ட கேள்விகளுக்கு மிக சரியான பதிலை திவாகர் சொல்லியிருக்கிறார். அதன் காரணமாகத்தான் அவரை பிக் பாஸ் குழு தேர்வு செய்திருக்கிறது என்றெல்லாம் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full