பிரவீன் காந்தியின் கேவலமான செயல், அரோரா கொடுத்த ரியாக்சன் - கடுப்பில் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

By subhashini · 9/10/2025

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசன் தொடங்கி 4ம் நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா - 3 ,ஆதிரை - 3 , அப்சரா - 3 , பிரவீன் ராஜ் - 3 , பிரவீன் காந்தி - 4 , திவாகர் - 7, கலையரசன் - 12 ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து விவாதம் காரசாரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் 9:

குறிப்பாக, திவாகரின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. நேற்று பிக் பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை பிக் பாஸ் வீட்டின் தலைவருக்கு பதிலாக தல என்று அழைக்கப்படுவார். பொதுவாக தலைவர் டாஸ்க்கில் வென்றால் அந்த வாரத்திற்காக எலிமினேஷன் ப்ரீ பாசை பெறலாம். ஆனால், இந்த முறை இந்த முதல் தல டாஸ்க்கில் வெற்றி பெரும் நபருக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க 15 வாரங்களகான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதே போல தல போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த வார தல போட்டிக்கு நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும்.

தல ரூம் டாஸ்க்:

மேலும் வீட்டின் தலையாக இருக்கும் அவருக்கு தனி அறையும் அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்கள். இதனால் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் பிரவீன் காந்தி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பிரவீன் காந்தி, அரோரா, துஷர் மூவருமே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பிரவீன் காந்தி, இந்த சீசன் பெரியளவு மக்கள் மத்தியில் பேசணும் என்றால் நீயும் நானும் லவ் பண்ணனும் என்று அரோராவிடம் சொல்கிறார்.

View this post on Instagram

A post shared by BB9Tamil_Updates (@bb9tamil_updates)

அதற்கு அரோரா சிரிக்கிறார். பின் பிரவீன் காந்தி, அதுவும் நான் உன்ன லவ் பண்ண மாட்டேன். நீ தான் என்னை வெறித்தனமா லவ் பண்ணனும். நான் வேண்டாம், புரிஞ்சிக்கோ என்று உன்னை கண்டுக்கவே மாட்டேன். அப்படி இருந்துமே நீதான் என்னை லவ் பண்ணி கொண்டே இருக்கணும். அப்படி இருந்தால் இந்த சீசன் டிஆர்பி எகிறிவிடும். ஏன்னா நான் ஒரு இயக்குனர். எனக்கு அதைப் பற்றி தெரியும் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியதை தான் தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கலாய்த்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full