இந்த மனுஷன் மைக் புடிச்சாலே கண்டன்ட் தான் - மீண்டும் வைரலாகும் மிஷ்கின் பேச்சு

By subhashini · 20/8/2024

வாழை படத்தின் ஃப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் மிஸ்கின் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’, மாமன்னன் போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி மலர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

வாழை படம்:

சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றிருக்கிறது. இதில் வாழை படக்குழுவினருடன் பா. ரஞ்சித், வெற்றிமாறன், ராம் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

வாழை படம் விழா:

அப்போது விழாவில் மிஸ்கின், உண்மையிலேயே ஒரு நல்ல படம் பார்த்தால் ஒரு வாரம் அதைப்பற்றி தான் யோசித்து ஆராய்ந்து கொண்டிருப்பேன். அதேபோல் ஒரு மோசமான படத்தை பார்த்தால் அந்த வாரம் முழுக்க எனக்கு காய்ச்சல் வந்தது போலவே இருக்கும். ஆனால், வாழை படத்தை பார்த்த பிறகு மாரியின் கிராஃப்ட் பார்த்து நான் ரொம்பவே அதிர்ச்சியாகி நின்றேன். நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வாழை படத்தை பாருங்கள்.

விழாவில் மிஸ்கின் பேசியது:

அதேபோல் நான் கெட்ட வார்த்தைகளை பேசுவதை தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண்ணை பார்த்தால் அடடே அழகாக இருக்கிறார்கள் என்பதை விட அடேங்கப்பா, நல்லா அழகா இருக்கே என்று சொல்ல விடுங்கள். இந்தியாவிலேயே, உலகத்திலேயே சிறந்த இயக்குனர்கள் என்றால் வெற்றிமாறன், ராம், நம்ம குழந்தை. அவர் பேரு டக்குனு வரமாட்டேங்குது எமோஷன் ஆகிவிட்டேன். உடனே எல்லோருமே நான் சரக்கு அடித்து விட்டு பேசுகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

நெட்டிசன்கள் ட்ரோல்:

உண்மையில் நான் சரக்கடிப்பது நிறுத்தி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. நான் இப்போது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் முதன் முதலில் சிக்ஸ்பேக் கொண்ட இயக்குனராக நான் தான் இருப்பேன் என்று பயங்கரமாக பேசியிருந்தார். இப்படி இவர் பேசியிருப்பதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பரிதாபங்கள் கோபி- சுதாகர் உடைய, நல்லா உருட்டு என்ற மீம்ஸ் தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full