Bank Heist படத்துக்கு எதுக்குடா இவங்க எல்லாம் - துணிவு பட நடிகர்கள் லிஸ்ட்டை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By subhashini · 24/12/2022

துணிவு படத்தின் நடிகர், நடிகைகள் விவரத்தை கண்டு நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாம் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாருடன் கைகோர்த்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் "சில்லா சில்லா" பாடலும் "காசேதான் கடவுளடா" என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து வரும் பொங்களன்று திரையில் வெளியாக உள்ளது.

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த "வாரிசு" படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒன்றாக வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது துணிவு படத்தில் டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்து நடித்துள்ளார் என்ற தகவல சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சார்பட்ட, நட்பே துணை, பண்ணி குட்டி போன்ற படங்களில் நடித்திருந்த தங்கதுரையும் நடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

அதோடு பல யூடியூப் பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. குறைந்த காலத்தில் தன்னுடைய முயற்சியினால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஜி பி முத்துவின் அபார வளர்ச்சியை கண்டு வியந்தாலும் மறுபுறம் இப்படத்தில் பிரேம் ஜி, எம் சுந்தர், வீரா, அமீர், பவானி, பக்ஸ், மகாநதி சங்கர் நடித்திருக்கும் நிலையில் தற்போது டிக் டாக்காரன ஜி பி முத்துவும் விஜய் டிவி தங்கதுரையும் துணிவு படத்தில் நடித்திருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல காமெடி நடிகர்களை கொண்டுள்ள இப்படத்தில் மீண்டும் தங்கதுறை, ஜி.பி முத்து இணைத்திருப்பதினால் ரசிகர்களின் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் பலர் "Bank Heist பாடத்தில் எதற்கு இந்தனை காமெடி நடிகர்கள் என்று வலிமை படத்தை போல ஏமாற்றி விடாதடா விணோத்து" என்று அஜித் ரசிகர்கள் போட்டிருந்த ட்விட்டர் பதிவுகளை மீம்ஸ் டெம்லேட்டுகளில் மூலம் ரீ ட்விட் செய்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full