கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் ராசி இல்லையா? கேலி செய்யும் நெட்டிசன்கள்
கீர்த்தி சுரேஷை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதிலும் இவர் பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
பேபி ஜான் படம்:
அந்த வகையில் இறுதியாக இவர் நடித்த ரகு தத்தா படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை அட்லீ தான் தயாரிக்கிறார். வருண் தவான் ஹீரோவாக நடித்த இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த தெறி படத்தினுடைய ரீமேக் தான் பேபி ஜான்.
படம் குறித்த தகவல்:
இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இயக்குனர் காளீஸ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ரிலீசானது. பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பேபி ஜான் படம் தோல்வி:
குறிப்பாக, அட்லீ தயாரித்திருக்கும் படம் என்பதாலே படத்தின் மீது ரசிகர்களுக்கு படம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது. முதல் படத்திலேயே அட்லீ நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்.
இந்நிலையில் நெட்டிசன்கள் கீர்த்திக்கு நார்த் இந்தியன் படமே ராசியில்லை என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் ட்ரோல்:
காரணம், கீர்த்தி சுரேஷ் முதலில் மைதான் என்ற பாலிவுட்டில் படத்தில் நடிக்க கமிட் ஆயிருந்தார். அந்த படத்தின் போது இவர் உடல் எடையை அதிகம் குறைத்ததனால் அந்த பட வாய்ப்பு இழந்தார். அதற்கு பின் தான் இவர் அட்லீ தயாரித்த பேபி ஜான் படத்தில் நடித்தார். ஆனால், இந்த படமுமே மிகப்பெரிய அளவில் தோல்வி சந்தித்து இருக்கிறது. இதனால் தான் கீர்த்திக்கு பாலிவுட் படங்கள் ராசியில்லை என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.