பேபி ஜான் படத்தில் விக்ரம் பட ரெப்ரென்ஸ் - அட்லீயை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

By subhashini · 25/12/2024

மீண்டும் காப்பி சர்ச்சையில் அட்லீ சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தளார் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் முதலில் இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

அட்லீ குறித்த தகவல்:

கடைசியாக இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இதை அடுத்து இவர் தன்னுடைய அடுத்த படத்தின் வேலையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

பேபி ஜான் படம்:

அந்த வகையில் தற்போது இவர் தெறி படத்தினுடைய இந்தி ரீமேக்கை தயாரித்திருக்கிறார். பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேபி ஜான் படத்தினுடைய போஸ்டர் தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் ட்ரோல்:

அதாவது, பேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் சல்மான்கான் நடித்திருக்கிறார். இவருடைய அறிமுகம் சீன் வரும் போது ஏஜென்ட் என்று அவருடைய பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்கள். தற்போது இதுதான் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. காரணம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரம் வந்திருக்கும். அதை ரெஃபரென்ஸாக வைத்து தான் அட்லீ இந்தப் படத்தில் காண்பித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அட்லீ காப்பி சர்ச்சை:

அதுமட்டுமில்லாமல் இயக்குனராக இருக்கும் போது தான் அட்லீ காப்பியடித்தார் என்றாலும் தயாரிப்பாளர் ஆகியுமே காப்பி செய்கிறார். இவர்தான் அந்த இயக்குனருக்கும் ஐடியா சொல்லியிருப்பார் என்றெல்லாம் நெட்டிசன்கள் கிண்டல் கேலி செய்து வருகிறார்கள். ஏற்கனவே அட்லீ எந்த படம் எடுத்தாலுமே அதை காபி என்று தான் நெட்டிசன்கள் கூறி இருந்தார்கள். ராஜா ராணி- மௌன ராகம் படத்தின் காப்பி, தெறி- சத்ரியன் படத்தின் காப்பி, மெர்சல்- அபூர்வ சகோதரர்களின் காப்பி என்று விமர்சித்து இருந்தார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full