'இதெல்லாம் ஓவரா இல்ல' ஆரியை காப்பி அடித்த முத்துகுமரன் - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி போல முத்து செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 92 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். முத்துக்குமரன் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்று விட்டார் என்று சொல்லலாம்.
அதோடு கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் தீபக், பவித்ரா, ராணவ், ஜாக்லின், ராயன், அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள்.
நிகழ்ச்சியில் முத்து:
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் முத்துகுமரன். இவர் சிறந்த தமிழ் பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இருந்தாலுமே இவரை உலகம் முழுவதும் அறிய வைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் முத்து விளையாடிய விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தது. பலருமே இவர் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். ஆனால், கடந்த சில வாரங்களாக முத்து நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்று இருக்கிறது.
#Aari shouted when things were clarified against him. 🫰#Muthukumaran is shouting now because he's been exposed completely! 😔#BiggBossTamil8 #Soundariya #BiggBossTamilSeason8 #BiggBoss8Tamil #BiggBossTamil #BBTamil8 pic.twitter.com/T4k84kPedm
— Rasigan@Fan🎙️ (@Rasigan_022) January 5, 2025
முத்து செய்த வேலை:
குறிப்பாக, கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் முத்து கூட்டணி வைத்து செய்த வேலை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை கடந்த வாரம் இறுதியில் விஜய் சேதுபதி கண்டித்து இருந்தார். விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு முத்துவால் பதில் சொல்லவே முடியவில்லை, திணறி போனார். இதை அடுத்து முத்துக்குமரன் பிக் பாஸ் வீட்டிற்குள் பயங்கரமாக கத்தி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ தான் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
#Muthukumaran : Ellamae Drama!
— 𝓥𝓲𝓷𝓸𝓭 🇬🇧🇮🇳 (@VinodStalwart) January 5, 2025
Poonai 🐈 trying to be a Puli 🐅 #Muthukumaran copying #Aari
Kathunaaa ne Aari ayidiviya ? FAKE #BiggBossTamil #BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 pic.twitter.com/fzogLmNdxZ
நெட்டிசன்கள் விமர்சனம்:
ஏற்கனவே இதற்கு முந்தைய சீசனில் ஆரி, தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு நியாயம் கிடைத்தவுடன் போட்டியாளர்கள் முன்பு கத்திருப்பார். அதேபோல் தற்போது முத்து ககத்தி இருக்கிறார். இதை பார்த்து தான் நெட்டிசன்கள், நீ ஆரி போல ட்ரை பண்ணுவது எதற்கு? ஏன் இந்த தேவையில்லாத வேலை. இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு முத்து என்றெல்லாம் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். தற்போது முத்துவை ட்ரோல் செய்யும் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.