பிக் பாஸ் சென்ற ரஞ்சித், பாக்யலட்சுமி சீரியலில் அவரது கேரக்டரை என்ன செய்தார்கள் தெரியுமா?
விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் முடிந்து 23 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி முதல் நாள் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை கலவரம் தொடங்கி விட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா வெளியேறி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சியமான நபர்களில் ஒருவர் ரஞ்சித். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் கதாநாயகன் நடித்திருந்தாலும் இடையில் வாய்ப்பு குறைந்தவுடன் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். பின் இடையில் இவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அதன் பின் இவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பழனிசாமியி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரஞ்சித் குறித்த தகவல்:
இதை அடுத்து சமீபத்தில் இவர் இயக்கி நடித்திருந்த கவுண்டபாளையம் படம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டிருந்தது. நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தார் ரஞ்சித். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை அதிகமாக ட்ரோல் செய்து இருந்தார்கள். தற்போது இவர் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கூட ரஞ்சித் இயக்கிய படத்தை பற்றி விஜய் சேதுபதி பேசி இருப்பார்.
நிகழ்ச்சியில் ரஞ்சித்:
மேலும், நிகழ்ச்சி முதல் நாளில் இருந்து தற்போது வரை ரஞ்சித் சிறப்பாக விளையாடி வருகிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயது அதிகமானவர்கள் வந்தாலே முதல் வாரத்திலேயே வெளியே சென்று விடுவார்கள். ஆனால், இவர் மூன்று வாரம் கடந்து விட்டார். இன்னும் இவர் நிகழ்ச்சிக்குள் இருப்பார் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ரஞ்சித் நடித்த பழனிசாமி கதாபாத்திரம் என்னானது? என்பது குறித்து தான் பார்க்க போகிறோம்.
#Ranjith sir apo neenga Dubai-Ku thaan poreenga correct ah 😂😂😂
— BB Mama (@SriniMama1) October 28, 2024
1 month 2 months la vanthurvingala😳😳😳#BiggBoss8Tamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8 #BBMama
pic.twitter.com/Es9M3Jqogv
பாக்கியலட்சுமி சீரியலில் ரஞ்சித்:
அதாவது, பாக்கியலட்சுமி சீரியலில் பழனிசாமி, பாக்யாவை சந்தித்து நான் துபாய் செல்கிறேன். வருவதற்கு ஒன்று, இரண்டு மாதங்கள் ஆகும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பாக்யாவுமே பத்திரமாக போயிட்டு வாருங்கள் என்று வழி அனுப்பிருக்கிறார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு தான் துபாய் என்று சொல்லி இருக்கிறார். தற்போது இதைத்தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, பிக் பாஸ் வீடு தான் உங்கள் துபாயா என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.