வலியால் துடித்த ராணவ், கிண்டல் கேலி செய்த சௌந்தர்யாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்
விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 73 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
In Space
— Gowtham Thanikaivel (@GowthamT28) December 17, 2024
Do #Raanav has PR?
Yes of Course, Her name is #Soundarya🤣
Raanava yella task laiyume pesi pesi ithu varaikum kondu vanthathu sound than.#BiggBossTamil8#BiggBoss8Tamil pic.twitter.com/5m0BdJnQjd
அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் 8:
அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் புது டாக்ஸ்கை கொடுத்திருந்தார். அதில் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட கற்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தங்களுடைய பார்ட்னர் உதவியுடன் எதிர் அணியினர் கற்களை எடுக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த போட்டியில் பவித்ராவும் ஜெஃப்ரியும் ஒரு அணியாக இருந்து தங்களுடைய கற்களை காப்பாற்றி வந்தார்கள். அப்போது ராணவ், பவித்ராவிடமிருந்து கற்களை எடுக்க முயலும் போது ஜெஃப்ரி ராணவை கீழே தள்ளி இருந்தார். இதனால் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது.
அடிபட்ட ராணவ்
ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட சவுந்தர்யா, அவன் நடிக்கிறான், டிராமா போடுகிறான் என்றெல்லாம் பேசி இருந்தார். அவருடன் அங்கு இருந்த சில பேரும் ராணவை கிண்டல் அடித்து பேசி இருந்தார்கள். அதற்குப்பின் அருண், ராணவை உடனடியாக கன்ஃபெக்சன் ரூமுக்கு அழைத்து சென்று உதவி செய்திருந்தார். பின் ராணவை மருத்துவமனையில் அனுமதித்து இருந்ததாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. அதற்கு பின்
ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார்.
#Soundariya exposing #Muthu :: He said #Raanav is acting—privately.
— Rasigan@Fan🎙️ (@Rasigan_022) December 17, 2024
Moonjikku nera solla guts illa, aana #Sound'a safe player'nu nominate panraaru.! #BiggBoss8Tamil #BiggBossTamil #BiggBossTamil8 #BBTamil8 #BiggBossTamilSeason8 #VijaySethupathipic.twitter.com/4TAD53geUh
கிண்டல் செய்த சௌந்தர்யா:
இதனால் போட்டியாளர்கள் வருத்தப்பட்டு ராணவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்கள். அப்போது சௌந்தர்யா, நீ உன்னை தெரிய வைப்பதற்கு தான் இப்படி செய்கிறாய் என்று நினைத்தேன் என்றார். இதனால் ராணவ்-சௌந்தர்யா இருவருக்கும் வாக்குவாதம் வந்தது. அதற்க்கு பின் ஜெப்ரியிடம் சௌந்தர்யா, நான் ராணவிடம் மன்னிப்பு கேட்க பேசவில்லை. அவனால் தான் அடிபட்டது. அதை அவன் உணர வேண்டும். இத்தனை நாள் நிகழ்ச்சியில் அவன் நடித்துக் கொண்டுதான் இருந்தான். அவனை வெளியில் காண்பிப்பதற்காக நடித்துக் கொண்டு இருந்தான். அதே போல் தான் இதையும் அவன் செய்தான் என்று நினைத்தேன். இவ்வளவு நாள் நடித்திருந்த ஒருத்தருக்கு உண்மையாலுமே அடிபட்டால் நம்ப முடியுமா? அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
#Soundarya 🤡 is the most toxic, arrogant person in BB Tamil.
— Dr.Nellai (@nellaiseemai) December 18, 2024
Doubting #Raanav during the task is acceptable.
But why she still thinks fake after treatment. Still showing Thimir, Vanmam. She is UGLY. INHUMANE.#BiggBossTamil8 #BiggBossTamil @VijaySethuOffl 🤓 pic.twitter.com/E6tvE2cNQP
நெட்டிசன்கள் கிண்டல்:
அவன் ரொம்ப ஓவராக பண்ணுகிறான். இதற்கு முன்பு கூட ஒரு முறை அடித்தது போல அவன் நடித்தான். இப்படி எல்லா நேரத்திலேயுமே ஒருத்தன் நடித்துக் கொண்டிருக்கும் போது உண்மையாகவே அவனுக்கு ஏதாவது ஆகும் போது நம்ப முடியுமா? அதேபோல் முத்துவும் அவனை நடிக்கிறான் என்று தான் சொன்னான். இப்போ அவனிடம் நல்லவன் போல் பேசுகிறான் என்று சௌந்தர்யா அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இதை தான் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ஒருவருக்கு அடிபட்டு இருக்கும் நிலையில் கூட இவ்வளவு மோசமாக விமர்சித்து பேசுவதா, இது என்ன ஒரு குணம். அவரிடம் ஆறுதல் சொல்லி மன்னிப்பு சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை அவரையே குறை சொல்லி இருப்பது தவறான செயல் என்றெல்லாம் சௌந்தர்யாவை விளாசி வருகிறார்கள்.