ஒரு பிரபலத்துக்கு இவ்வளவு ஆட்டியூட் இருக்க கூடாது - நயன்தாராவை விளாசிய நெட்டிசன்கள்- முழு விவரம் இதோ

By subhashini · 12/1/2025

femi 9 நிகழ்ச்சியில் நயன்தாரா செய்த செயலை கண்டித்து இன்புளுயன்சர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீடியாவில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலம் லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் பல கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல கோலிவுட், கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். இதனிடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் அழகான இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் நயன் பிசியாக நடித்து வருகிறார்.

நயன் பற்றிய தகவல்:

இப்படி நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார். இதை அடுத்து கடந்த ஆண்டு 9ஸ்கின் என்ற சரும பாராரிப்பு தயாரிப்புகளை நயன் அறிமுகப்படுத்திருந்தார். அதற்கு பின் ‘Femi 9’ என்ற நாப்கின் தயாரிப்பை நயன் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த நாப்கின் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும், femi 9 என்ற பிசினஸ் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து மதுரையில் விழா நடத்தி இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Anitha <Trendinggirltirupur > (@trendinggirltirupur_)

நயன்தாரா செய்த வேலை:

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள், விக்னேஷ், நயன் மாமியார் எல்லாம் கலந்திருந்தார்கள்.
இந்த விழாவிற்கு நயன்தாராவை பார்க்க ரசிகர்களின் கூட்டம் திரண்டு இருந்தார்கள். ரசிகர்கள் கை நீட்டும் போது நயன் அவர்களுக்கு கை கொடுக்காமல் கும்பிட்டு நயன் கிளம்பி இருக்கிறார். அதற்குப்பின் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தன்னுடைய மாமியாருக்கு மட்டும் கை கொடுத்து நயன்தாரா பேசியிருக்கிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த இன்புளுயன்சர் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இன்புளூயன்சர் வெளியிட்ட வீடியோ:

அந்த வீடியோவில், ஒரு செலிபிரிட்டிக்கு இவ்வளவு ஆட்டிடியூட் இருக்கும் என்று நான் பார்க்கவே இல்லை. சமீபத்தில் நயன்தாராவின் femi 9 மெகா ஈவன்ட் நடந்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நிறைய இன்புளூயன்சரை இன்வைட் கொடுத்து வரவேற்று இருந்தார்கள். காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை விழா என்று சொன்னார்கள். நாங்கள் எல்லோருமே காத்திருந்தோம். ஆனால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருமே மதியம் 2 மணிக்கு மேல் தான் வந்தார்கள். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேல் அவர்கள் தாமதம். அதோடு நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தான் முடிந்தது. இதனால் நிறைய பஸ் எல்லாம் மிஸ் செய்து இருந்தார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

பிரபலங்கள் தாமதமாக வரலாம். ஆனால், இவ்வளவு நேரம் தாமதமாக வந்தும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. பின் நிகழ்ச்சியில் பெண்களுக்காக விழிப்புணர்வு பற்றி நிறைய பேசியிருந்தார்கள். அதையெல்லாம் குறை சொல்லவில்லை. நிகழ்ச்சிக்குப் பிறகு இன்புளுயன்சரை சந்தித்து பேச சின்ன மீட்டிங் வைத்திருந்தார்கள். அப்போது எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். உடனே விக்னேஷ் சிவன், என்ன போட்டோ எடுக்கணுமா? வந்து நில்லுங்க என்று ரொம்ப ஆட்டிட்யூடாக பேசியிருந்தார். இது எனக்கு கோபம் வந்து அவரிடமே பேசினேன். உடனே அவர் தனியாக என்னை அழைத்து பேசி இருந்தார். இது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. தற்போது இவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு சென்ற சிலருமே நயன்தாராவை விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full