ரஜினியின் ஸ்டைல் அவரது சொந்த ஸ்டைல் இல்லையா? வைரலாகும் வீடியோ இதோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ட்ரோல் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இவருக்கு தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதுவரை 150 மேற்பட்ட திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த மூன்று முகம், பாட்ஷா, தளபதி, படையப்பா, சிவாஜி, எந்திரன், எந்திரன் 2.0 போன்ற படங்கள் அகில இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. அதேசமயம், கடந்த 2002 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் கனவு படமான 'பாபா' திரைப்படத்தில் இவர் சிகரெட் பிடிக்கும் காட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அதற்கடுத்த படங்களில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்விலும் சிகரெட் பிடிப்பதை இவர் நிறுத்திவிட்டார்.
ரஜினிகாந்தின் ஸ்டைல்:
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், நடிகர் ரஜினிகாந்த் தனக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கி கொண்டதால், அதுவே அவரது அடையாளமாகி போனது. தனக்கென நடை, உடை, பாவனை, தலையை கோதும் ஸ்டைல், சிகரெட்டை பிடிக்கும் ஸ்டைல், பேசும் ஸ்டைல், நிற்கும் ஸ்டைல் என்று ஒரு அகராதியை உருவாக்கி இருந்தார் ரஜினிகாந்த். குறிப்பாக இவரின் இந்த ஸ்டைலுக்காகவே 1980களில் இருந்து 2கே கிட்ஸ் வரை எல்லாரும் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.
த்தா டேய் பரதேசி அந்த ஸ்டைல் கூட உனக்கு சொந்தம் இல்லையாட #Copycat 🤷@rajinikanth 🤡#50YearsOfMentalism 🤘 pic.twitter.com/URcRXWp2JU
— 𝕿𝖍𝖚𝖌𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍 🇮🇳 MNM Supporter 🔦 (@KAMALinMNM) August 11, 2024
நெட்டிசன்களின் ட்ரோல்கள்:
இவை அனைத்திற்கும் வேட்டு வைக்கும் வகையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில், ரஜினி 1975 இல் தான் சினிமாவில் நுழைந்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே, ஹாலிவுட் நடிகர்கள், ரஜினியை போல் படு ஸ்டைலாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ரஜினி சிகரெட் பிடிப்பது போலவும், தலை கோதுவது போலவும் 1975 முன்பே ஹாலிவுட் படங்களில் ஸ்டைலாக நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவை பார்த்து வரும் நெடிசன்கள், 'இந்த ஸ்டைல் கூட உனக்கு சொந்தம் இல்லையா, Copy Cat என்று ரஜினியை வாட்டி எடுத்து வருகிறார்கள்.
கடைசியாக வந்த படம் :
கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படம் 'லால் சலாம்'. இப்படத்தை இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா ரகுபதி, ஷர்வானந்த், மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரஜினி நடிக்கும் படங்கள் :
மேலும் இப்படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை அடுத்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய சூட்டிங் வேலைகள் தான் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.