ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்ற 'குக் வித் கோமாளி 5' நிகழ்ச்சி - வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள், என்னடா நடக்குது இங்க
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள்.
Repeatu… #CookWithComali | #CookWithComali5 | #CookuWithComali | #CookuWithComali5 pic.twitter.com/YQzLxi9iCr
— Cooku With கோமாளி (@ComalCook) July 13, 2024
இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருந்தது பலருக்கும் பேர் அதிர்ச்சி. பின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பின் இந்த 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
குக் வித் கோமாளி 5:
இந்த சீசனில் பழைய கோமாளிகளும், புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஸ்ரீகாந்த், ரிவியூவர் இர்பான், பாண்டியன் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர்.
விஜய் டிவி ஆபாசத்தின் உச்சதுக்கே பொய்ட்டனுங்க ! 🤬 pic.twitter.com/sq6rF4tmLo
— Dr Jeni {Blue Tick} (@jenniifer_off) July 14, 2024
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புது கான்செப்ட்கள் வழங்கி வருகிறார்கள். கோமாளிகளும் வழக்கம் போல் குக்குகளையும் நடுவர்களையும் கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுக்கும் டாஸ்க்கை கொடுத்திருந்தார்கள். இதனால் ஒவ்வொரு சினிமா பிரபலங்களும் தங்களுக்கு பிடித்த உணவை கூறி இருந்தார்கள்.
நிகழ்ச்சி குறித்த விமர்சனம்:
இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து சில விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. சில போட்டியாளர்கள் சரியாக நடுவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் நடுவர்களும் போட்டியாளர்கள் இடம் ரொம்ப விளையாட்டாக நடந்து கொள்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கோமாளிகளும் நிகழ்ச்சியில் காமெடி செய்வதாக சொல்லி ரொம்ப வன்மமாக பேசுகிறார்கள்.
‘டாப் குக் டூப் குக்’ நிகழ்ச்சி:
நிகழ்ச்சியில் ரொம்ப கிரன்ச் ஆகவும், ஆபாசமாகவும் சில கோமாளிகள் பேசுகிறார்கள். இதனாலே இந்த நிகழ்ச்சி பெரிய அளவு வரவேற்கப்படவில்லை. இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான். அதே சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியே சூப்பர் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘டாப் குக் டூப் குக்’ என்ற புதிய நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சி போல இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.