முதல் முறையாக சறுக்கிய ஷங்கர், ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன #Indian2Disaster ஹேஷ் டேக்

By subhashini · 13/7/2024

'இந்தியன் 2' படத்தை நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கும் பதிவுகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமலஹாசன் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்-கமல் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். படத்தில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய சுதந்திர வீரர்களில் ஒருவர் சேனாதிபதி. இவர் லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராடுபவர். தற்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் மற்றும் அவருடைய நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்கிறார்கள்.

இந்தியன் 2 படம்:

இதற்காக அவர்கள் போராடவும் செய்கிறார்கள். சித்தார்த் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்து கொண்டிருக்கிறார். இருந்தும் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது, இந்தியன் தாத்தா தான் வரவேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதற்காக இவர் இந்தியனை தேடும் பயணத்திலும் இறங்குகிறார். மேலும், 'கம்பேக் இந்தியன்' என்ற ஹேஷ் டேகை சோசியல் மீடியாவில் வைரலாக்கி நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை சேனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் செய்கிறார்.

படத்தின் கதை:

உலகில் ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. கடைசியில் அவர் தைவானில் இருந்து மீண்டும் இந்தியா செல்ல நினைக்கிறார். இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் சேனாதிபதியை கைது செய்ய வீரசேகரன் என்ற போலீஸ் அலைந்து கொண்டிருக்கிறார். லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று சேனாதிபதி மீண்டும் அவதாரம் எடுக்கிறார். இதனால் சேனாதிபதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? குற்றவாளிகளை தண்டித்தாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை. முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் ஊழலை இயக்குனர் காட்டி இருந்தாலும், இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க நடக்கும் லஞ்சத்தை காட்டியிருக்கிறார்.

படம் குறித்த அலசல்:

இருந்தாலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. 'இந்தியன்' படத்துக்கு கிடைத்த வரவேற்பு 'இந்தியன் 2'விற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும். அதோடு சங்கர் திரைப்பயணத்திலேயே இந்த படம் பெரும் தோல்வி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தைப் பார்த்து ரசிகர்கள் கொடுத்திருக்கும் ரிவ்யூ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் சிலர், இது சங்கர் படமே கிடையாது. சங்கர் வேண்டா வெறுப்பா படம் எடுத்து போட்டால் இப்படித்தான் இருக்கும்.

நெட்டிசன்கள் கருத்து:

இந்த படத்திற்கு கமலுக்கு மேக்கப் செய்து இருக்கிறார்களே தவிர நடிப்பையே பார்க்க முடியவில்லை. சித்தார்த் நடித்து இருக்கிறாரா? என்று தெரியவில்லை. பிஜிஎம் போட்டு இருக்காங்க. இந்தியன் முதல் பாகத்தில் வந்த பிஜிஎம் தான் அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். பாட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எல்லாம் இல்லை. சத்தியமா சங்கர் சார் இப்படி செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய எதிர்பார்ப்பை ரொம்பவே ஏமாற்றி விட்டார். தயவுசெய்து யாரும் காசை வீணடிக்காதீர்கள். இந்த படத்திற்கு இவ்வளவு செலவு செய்து வந்து பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. யாரும் இந்தியன் படத்திற்கு வராதீர்கள் என்று #Indian2Disaster ஹேஷ் டேக்கை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full