‘கணவர் போனதுக்கு அப்புறமா பல பேர்' வேதனையை பகிர்ந்த பிரபல செய்தி தொகுப்பாளர் சௌதாமணி.

By subhashini · 6/4/2024

பிரபல சேனலில் பணியாற்றும் நபர் கொடுத்த செக்ஸ் டார்ச்சல் குறித்து செய்தி வாசிப்பாளர் சௌதாமணி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே செய்தி வாசிப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சௌதாமணி. இவர் செய்தி வாசிப்பாளர் மட்டுமில்லாமல் ஆசிரியை, தொழில் முனைவர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார்.

இவர் கேரளாவை சேர்ந்தவர். இருந்தாலும் இவர் வளர்ந்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான்.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தி வாசிப்பாளர் சௌதாமணி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறியிருந்தது, என்னுடைய கணவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். தற்போது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

செய்தி வாசிப்பாளர் சௌதாமணி பேட்டி:

அவர்களை வெளிநாட்டில் படிக்க வைத்து இருக்கிறேன். என்னுடைய கணவர் இறந்த பிறகு நான் வேலை பார்த்த இடத்தில் என்னை திருமணம் செய்து கொள்ள சில பேர் கேட்டார்கள். ஆனால், எனக்கு இரண்டாம் கல்யாணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. காரணம், யார் என்னுடைய வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் என்னுடைய குழந்தைகளையும் அவர்கள் குழந்தைகளாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் திருமணம் குறித்து சொன்னது:

அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதனால் தான் நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னுடைய வாழ்க்கையானது என்னுடைய குழந்தைகளுக்காக மட்டும் தான் என்று நான் முடிவு செய்து விட்டேன். என்னுடைய கணவர் இறந்த பின்னர் நான் வழக்கம் போல செய்தி வாசிப்பதற்கு பிரபல சேனல் ஒன்றுக்கு சென்றேன். ஆனால், அங்கு வழக்கத்திற்கு மாறாக செய்திகள் வாசிப்பதற்கு குறைவாக இருந்தது.

பிரபல சேனலில் நடந்த சம்பவம்:

பின் இது குறித்து தலைமையிடம் சென்று கேட்டேன். ஆனால், அவர், நீ என்ன என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறாய்? என்று ஒரு மாதிரியாக பேசினார். பிறகு என்னை போனில் அழைத்து, உன்னுடைய குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னுடைய செலவை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பேசினார். எனக்கு மட்டும் இல்லாமல் அந்த நபர் அங்குள்ள பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுதலை கொடுத்திருந்தார். அவர் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் நான் ஒரே மாதத்திலேயே அங்கிருந்து வெளியே வந்து விட்டேன்.

https://www.youtube.com/watch?app=desktop&v=npjb3kIFCpM

பாலியல் தொல்லை குறித்து சொன்னது:

அதற்குப் பிறகு சன் டிவி என்றாலே எனக்கு உடம்பெல்லாம் கூசம். அந்தளவிற்கு அருவருப்பான நபர்கள் அங்கு இருக்கிறார்கள். மேலும், அகிலா கண்ணன் என்பவர் தான் அவர் மீது புகாரை போலீசில் கொடுத்திருந்தார். அவருக்கு நடந்த பாலியல் ரீதியான துன்புறுதல் பல பெண்களுக்கு நடந்திருக்கிறது. ஆனால், அகிலாவிற்கு யாருமே சப்போர்ட் செய்யவில்லை. கடைசியில் நான் அவரிடம் சென்று உங்களுக்காக நான் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்கிறேன். இந்த முடிவை என்னுடைய கணவர் இருந்திருந்தால் நான் எடுத்திருக்க முடியுமா என்று சந்தேகம் தான் இருந்தாலும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று கூறினேன் என்று சொல்லி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full