உலகம் முழுவதும் பரவிய இந்த covid-19 கொத்து கொத்தாக மக்களை கொன்று வருகிறது. மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். ஒட்டுமொத்த உலகையும் இந்த கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கம், காவல்துறை, தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் என எல்லோரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள்.

Advertisement

கொரோனா காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என ஒருவரை கூட இந்த கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து உள்ளார்கள்.

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஹாலிவுட் நடிகர் நிக் கோர்டரோவின் வலது காலை மருத்துவர்கள் எடுத்து உள்ளார்கள். ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் நிக் கோர்டரோ. இவர் கடந்த 31-ந்தேதி வீட்டில் திடீர் என்று மயங்கி விழுந்து உள்ளார். பின் இவருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து நடிகர் நிக் கோர்டரோ அவர்களை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

Advertisement

பின் நடிகர் நிக் கோர்டரோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளது என்று உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து நடிகர் நிக் கோர்டரோ அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்து உள்ளார்கள். தீவிர சிகிச்சை அளித்து வந்தும் கொரோனா பாதிப்பால் அவரது காலில் ரத்தம் உறைந்தது. இதனால் நடிகர் நிக் கோர்டரோ அவர்களின் வலது கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் செல்லவில்லை.

Advertisement

மேலும், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், அவரின் உடலுக்குள் ரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது. இதனால் அவரின் உள் உறுப்புகள் செயல் இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இக்கட்டான நிலையில் நடிகர் நிக் கோர்டரோவை காப்பாற்ற வேற வழி இல்லாததால் அவருடைய வலது காலை எடுக்கப்பட்டது. அவரது வலது கால் மட்டும் எடுக்க வில்லை என்றால் நடிகர் நிக் கோர்டரோவின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குடும்பத்தினரின் அனுமதியின் பேரில் நிக் கோர்டரோவின் வலது காலை மருத்துவர்கள் எடுத்தார்கள். தற்போது நிக் கோர்டரோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நலமுடன் இருப்பதாக அவரது மனைவி அமண்டா கூட்ஸ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் நடிகர் நிக் கோர்டரோ உடல் நிலை சீக்கிரம் குணம் ஆக வேண்டும் என்று பிராத்தனை செய்து அவருகிறார்கள்.

Advertisement