கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் செய்த மோசமான செயல் - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

By subhashini · 19/12/2025

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நிதி அகர்வால். இவர் திரைப் பட நடிகை மட்டும இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் ஹிந்தியில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் இந்த படம் வசூல் பெறவில்லை. இதை தொடர்ந்து தெலுங்கில் வெளியான ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் நடித்தார் நிதி அகர்வால். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நிதி அகர்வாலுக்கும் இந்த படம் மிகப் பெரிய பூஸ்ட் அப் ஆக அமைந்தது. இதனை தொடர்ந்து நிதி அகர்வால் அவர்கள் தமிழில் காலடி தடம் பதித்து இருந்தார். தற்போது இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

நிதி அகர்வால் குறித்த தகவல்:

அந்த வகையில் தற்போது நிதி அகர்வால் அவர்கள் பிரபாஸ் நடித்திருக்கும் ராஜா ஷாப் என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். ஹாரர் ஃபேண்டஸி காமெடி திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை மாருதி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு தமண் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

நிதி அகர்வால் வீடியோ:

இந்த நிலையில் இந்த படத்தினுடைய பிரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள லுலு மாலில் நடைபெற்றிருந்தது. இதில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே மாலில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கூட்டம் சூழ்ந்து விட்டது. அந்த கூட்ட எரிச்சலில் நிதி அகர்வால் சிக்கி கொண்டு கஷ்டப்பட்டு தான் காரின் உள்ளே ஏறி சென்றார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Thanthi TV (@thanthitv)

கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகை:

அதில், சிலர் செல்பி எடுக்கும் போது நிதியின் மீது கை வைக்கவும் முயன்றிருக்கிறார்கள். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் காரணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து முன் அனுமதி எதுவும் வாங்காமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்கள் என்று போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full