எனக்கு சேலை கற்றது ரொம்ப புடிக்கும், ஆனா சினிமால அத அவாய்ட் பண்ணிடுவேன் - ஓபனாக காரணத்தை கூறிய கார்த்தி, சசி குமார் பட நடிகை.

By ·

சினிமாவில் நடிகைகள் தொப்புளை காட்டுவது ஒரு வக்கிரமான செயல் என்று நடிகை நிகிலா விமல் ஆவேசமாக கூறியிருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளம் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை நிகிலா விமல். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த வெளியான ‘Love 24/7’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். மேலும், இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வசந்தமணி இயக்கத்தில் வெளிவந்த வெற்றிவேல் என்னும் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தில் நிகிலா நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் கிடாரி,பஞ்சுமிட்டாய், ரங்கா, ஒன்பது குழி சம்பத் என பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

நிகிலா விமல் நடித்த படம்:

அந்த வகையில் சமீபத்தில் நடிகை நிகிலா விமல் மலையாளத்தில் நடித்து வெளிவந்து இருந்த படம் ஜோ அன்ட் ஜோ. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டை விட இந்த படம் வசூல் செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஜோமோள் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிகிலா விமல் நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீட்டில் அடங்கிக் கிடக்கும் பெண்ணாகவும்,

நிகிலா விமல் அளித்த பேட்டி:

தன்னுடைய தம்பியுடன் சதா சண்டை பிடித்திருக்கும் அக்கா கதாபாத்திரத்தில் நிகிலா நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் நடித்த அனைத்து படங்களிலுமே கவர்ச்சி காட்டாமல், உடலையும் காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிகிலா விமல் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நடிகைகள் தொப்புளை காட்டுவது குறித்து கூறி இருப்பது, எனக்கு சேலை கட்டுவது தான் பிடிக்கும்.

சினிமாவில் தொப்புள் காட்டுவது வக்கிரம்:

ஆனால், சினிமாவில் மட்டும் சேலை கட்டுவதை அதிகம் தவிர்த்து விடுவேன். காரணம், அவங்க சேலை கட்ட சொல்வதே நடிகைகளின் தொப்புளை அரைகுறையாக காட்டத் தான். என்னை பொருத்தவரைக்கும் தொப்புளை காட்டுவதும், பார்ப்பதும் கவர்ச்சி இல்லை, வக்கிரம். நடிப்பவர்களின் தொப்புளை குளோஸப்பில் காட்டினாள் குதறி விடுவேன். அதே மாதிரி முந்தானையை விலக்கி அதை ஹீரோ பிடித்து இழுக்கிறது எல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காது.

பெண்ணுக்கு நடக்கும் அவமானம்:

துப்பட்டா போடாமல் இருக்கலாம், முந்தானை இல்லாமல் வெறும் துண்டு கட்டிகூட நடிக்கலாம். ஆனால், போட்டிருக்கிற முந்தானையை விலக்கி நடிக்கிறது எல்லாம் பெண்மைக்கு இழைக்கப்படும் அவமானம். சினிமாவில் ஒரு பெண் எப்படிப்பட்ட உடை அணிந்து வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், போட்டு இருக்கிற உடையை விலக்குவது, ஒதுக்குவது தான் தப்பு. அது அவர்களுக்கே அவமானமான விஷயம் என்று ஆவேசமாக நிகிலா விமல் பேட்டியளித்திருந்தார். இப்படி இவர் கூறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full