முடிக்க போறாங்கன்னு நினைத்தோம், ஆனால் - நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஹீரோ போட்ட பதிவு

By subhashini · 25/8/2024

நினைத்தாலே இனிக்கும் சீரியல் செய்திருக்கும் மாபெரும் சாதனை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைகளை தொடர்களில் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று தான் நினைத்தாலே இனிக்கும்.

இந்த தொடரில் கதாநாயகனாக ஆனந்த் செல்வன், கதாநாயகியாக ஸ்வாதி ஷர்மா நடிக்கிறார்கள்
இந்த சீரியல் ஜீ தமிழில் வாரத்தின் ஏழு நாட்களுக்குமே 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழில் இந்த சீரியல் ஓளிபரப்பப்பட்டு வருகிறது. பொம்மி சுவீட் கடையை மையப்படுத்தி ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் தற்போது அமானுஷ்யம் இணைந்த அதிரடி கதையாக சென்று கொண்டிருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும் சீரியல்:

மேலும், தற்போது சீரியலில் தமன்னா மற்றும் அவரின் குரூப் தடைகளை மீறி பொம்மி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடக்கின்றது. இந்த சீரியலில் பொம்மியினுடைய அவதாரங்களாக 5 ஜீ தமிழ் நடிகைகள் தேவிகளாக ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்களை தமன்னாவின் கும்பல் எவ்வாறு தடுக்க போகிறார்கள்? பொம்மி இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்ற கோணத்தில் சீரியல் விறுவிறுப்பாக செல்ல இருக்கிறது.

சீரியல் செய்த சாதனை:

இதனால் ரசிகர்கள் மத்தியிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஆயிரம் எபிசோடுகள் எபிசோடில் அடி எடுத்து வைத்து புதிய சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு செம்பருத்தி, இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் தான் 1000 எபிசோடுகளை கடந்து இருந்தது. தற்போது இந்த சாதனையை ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் பிடித்திருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சீரியல் ஹீரோ பதிவு:

அது மட்டும் இல்லாமல் இந்த சாதனையை சீரியல் குழுவினர் கொண்டாடியும், மக்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம் என்றும் நன்றி தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நினைத்தாலே இனிக்கும் சீரியலின் ஹீரோ ஆனந்த் செல்வன், இன்றைக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷலான நாள். நினைத்தாலே இனிக்கும் தொடர் ஆரம்பித்து மூன்று வருடம் நிறைவடைந்து நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. நான் நடித்த ப்ராஜெக்ட் ஆயிரம் எபிசோடு கடந்து இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Anand Selvan (@anandselvan10)

சீரியல் குறித்து சொன்னது:

இந்த நேரத்தில் எங்கள் இயக்குனர், கேமரா மேன், ஜீ தமிழ் டெக்னீசியன், சக நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ப்ராஜெக்ட் வரும்போது அதிகபட்சம் 300 எபிசோடு வரைக்கும் தான் போகும் என்று நினைத்தேன். ஏன்னா, இதுவரை நான் நடித்து தொடர் 200 எபிசோடு வரை தான் போயிருந்தது. இது 300 தொட்டாலே ஹிட் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 300 என்பது 500 ஆனது, பிறகு டைம் மாறியது. டைம் மாறினால் அவ்வளவுதான் சீரியல் சீக்கிரம் முடிந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால், ஆயிரம் வரைக்கும் வந்திருக்கிறது. நீங்க என்மேல வைத்திருக்கும் நம்பிக்கை என்னால் முடிந்த அளவுக்கு காப்பாற்றுவேன். எல்லோருக்குமே நன்றி, தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்கள் என்று எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full