திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் கர்ப்பம் - புகைப்படத்தை வெளியிட்ட நிஷா கணேஷ்.

By Siva · 11/6/2023

வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரையில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் 'நெஞ்சம் மரப்பதில்லை' என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ராமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது. நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர்.

இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளியான இருந்தார். பிறகு தான் நிஷா சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, தலையனை பூக்கள், மஹாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நிஷா நடித்து இருக்கிறார்.அதுமட்டும் இல்லாமல் நிஷா படங்களில் கூட நடித்து இருக்கிறார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட்டின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதனிடையே நிஷா- கனேஷ் இருவரும் காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு சமைரா என்ற மகளும் இருக்கிறாள். கடைசியாக இவர் 2020ம் ஆண்டு திருமகள் தொடரில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தார். அதன் பின் நிஷா கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகி விட்டார். இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கழித்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மேலும், தங்களது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்தனர்.

நடிகை நிஷா நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் MY3 வெப் சீரிஸில் நிஷா நடித்தார். அதே போல செம்பருத்தி தொடரிலும் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து நிஷாவை வேறு எந்த தொடரிலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை நிஷா, இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிஷா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full