மாட்டுச்சாணம் அள்ளிய கையால் தான் தேசிய விருது வாங்கினேன் - நடிகை நித்யா மேனன் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மெனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
பின் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தில் நித்யா நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருக்கு பெரிதாக படங்களில் காணவில்லை. இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மெனன் உருவக் கேலிக்கு உள்ளாகி இருந்தார். இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மெனன் அவர்கள் சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அதன் பலனாக இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது.
நித்யா மெனன் திரைப்பயணம்:
அந்த வகையில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நித்யா மெனன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் நித்யா மேனன் வாங்கியிருந்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவந்த காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.
நித்யா மேனன் பேட்டி:
தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவன் தலைவலி படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நித்யா மேனன், இட்லி கடை படத்திற்காக நான் மாட்டு சாணத்தை எப்படி அள்ளுவது, கையாள்வது என்றெல்லாம் கற்றுக் கொண்டேன்.
தேசிய விருது அனுபவம்:
நான் இதை செய்வேனா என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் ஆமாம் என்று சொன்னேன். வாழ்க்கையில் முதல் முறையாக வெறுங்கையால் நான் மாட்டு சாணியை எடுத்து உருட்டுவது, சுற்றுவது போன்ற வேலை எல்லாம் செய்தேன். அதோடு தேசிய விருது வாங்க டெல்லி செல்வதற்கு முன்பாக தான் நான் இட்லி கடை படத்தில் மாட்டு சாணம் கையில் எடுப்பது தொடர்பான காட்சியில் நடித்தேன். அந்த தேசிய விருது வாங்கிய போது என்னுடைய விரல் நகங்களில் மாட்டு சாணம் இருந்தது பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
மாட்டு சாணம் பற்றி சொன்னது:
மாட்டுச்சாணம் இருந்த கையில் தேசிய விருது வாங்கியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இதுதான் வாழ்க்கை. இட்லி கடை படத்தின் மூலம் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. அந்தப் படம் எனக்கு கிடைக்கவில்லை என்றால் இவற்றையெல்லாம் செய்வதற்கு எனக்கு வாய்ப்பும் கிடைத்திருக்காது என்று கூறியிருக்கிறார். தனுஷ் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன் உடன் அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். அக்டோபர் 1ஆம் தேதி இந்த படம் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.