எடை குறைப்பதாலோ, ஏற்றுவதாலோ சிறந்த நடிகை ஆக முடியாது, தேசிய விருது சர்ச்சைகளுக்கு நித்யா மேனன் பதிலடி
பிரபல நடிகை நித்யா மேனன், தேசிய விருது வென்றது குறித்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன்முதலாக 1954 ஆம் ஆண்டு தன் தொடங்கி இருந்தார்கள். தற்போது 70 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் விருதுகள் வாங்கும் படங்களில் பட்டியல்தான் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த வருடம் அதிகமான விருதுகளை 'காந்தாரா' படம் தான் பெற்றிருக்கிறது. தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களின் ஒருவர் மணிரத்தினம். இவருடைய படிப்புகளில் நீண்ட கால கனவு படமான 'பொன்னியின் செல்வம்' படம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது.
70 ஆவது தேசிய விருது:
இந்தப் படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு இரண்டு விருதுகள் எடுத்து இருக்கிறது. அதில் சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் வென்று இருக்கிறார். மேலும், சிறந்த நடன இயக்குனர் விருது ஜான் மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணனுக்கு, ' மேகம் கருக்காதா என்ற பாடலுக்காக கிடைத்திருக்கிறது. சமீபத்தில், இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் விருது வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
திருச்சிற்றம்பலம் - நித்யா மேனன்:
ஆனால், ஒரு சிலர் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தது ஒரு வழக்கமான கதாபாத்திரம்தானே. சாதாரணமாக நடித்ததற்கெல்லாம் விருதா. இதைவிட நடிகை சாய் பல்லவி 'கார்கி' படத்தில் நன்றாக நடித்திருந்தார். எங்களுக்கு நித்யா மேனன் மீது கோபம் இல்லை. ஆனால், கார்கி படத்துக்கு ஏதாவது விருது கொடுத்திருக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.
நித்யா மேனன் பதிவு:
தற்போது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை நித்யா மேனன், 'திருச்சிற்றம்பலம்' படத்தில் எனது நடிப்பை பார்க்கும் போது மிகவும் சாதாரணமாக தான் தெரியும். ஆனால், அப்படி நான் நடித்ததற்கு பின்னுள்ள என் உழைப்பை புரிந்து கொண்ட தேர்வுக்குழுவுக்கு எனது நன்றி. ஒரு சிறந்த நடிகை என்பது எடை குறைப்பதாலோ அல்லது எடையை அதிகரிப்பதாலோ அல்லது செயற்கையாக தங்கள் உடலை மாற்றிக் கொள்வதோ கிடையாது.
நித்யா மேனன் விளக்கம்:
அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதிதான். அதுவே முழுமையான நடிப்பு கிடையாது. இந்த கதாபாத்திரத்திற்காக நான் எவ்வளவு உழைத்து இருக்கிறேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். மேலும் இந்த விருது எனக்கு, பாரதிராஜா சாருக்கு, பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷ் ஆகிய நால்வருக்கும் அடங்கும். ஏனென்றால், இதுவரை எந்த படத்தில் நடிகருக்கு இணையான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் குறித்து:
கடந்த 2022 ஆம் ஆண்டு, இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் உள்ள 'தாய்க்கிழவி' மற்றும் 'மேகம் கருக்குதா பாடல்கள் உலக அளவில் ட்ரென்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.