நடிகைகள் கவர்ச்சி பொம்மை இல்லை - ஆவேசமாக நடிகை நித்யா மேனன் சொன்ன விஷயம்
ஜான்வி கபூருக்கு துணை நிற்கும் நித்யா மேனன்
தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.
தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகர் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ராம் சரணின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சிவராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
பெத்தி பட சர்ச்சை:
மேலும் இந்த படத்தில் நடிகை ஜான்வி கபூர் அவர்கள் 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் ஜான்வியின் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம் ரொம்ப மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கவர்ச்சிக்காகவே இந்த படத்தில் ஜான்சியை வைத்திருப்பது போலவே இருக்கிறது. படத்தில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை, துன்புறுத்தல், சம்மதம் இல்லாத செயல், தேவையற்ற வசனங்கள் போன்ற பல விஷயங்கள் இணையதளத்தில் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
நித்யா மேனன் பேட்டி:
ஒரு பெண்ணினுடைய கதாபாத்திரத்தை இப்படி எழுதலாமா? அதை திரையில் ரொம்ப மோசமாக காட்டி இருக்கிறார்கள் என்ற விவாதங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை நித்யா மேனன் அளித்த பேட்டியில், படங்களில் பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டுவது தென்னிந்திய சினிமாவுக்கு மட்டும் உரிய பிரச்சனை கிடையாது. ஒட்டுமொத்த திரை உலகளிலுமே இந்த பிரச்சனை பொதுவாக இருக்கிறது. வணிக ரீதியான வெற்றிக்காகவும் ரசிகர்களை கவர்வதற்காக மட்டுமே இத்தகைய காட்சிகள் படங்களில் வைக்கப்படுகிறது. இது எல்லை மீறிப் போகிறதா? என்று கேட்டால் நிச்சயமாக ஆமாம் என்று தான் சொல்லுவேன். நடிகைகள் தங்களுக்கு என்று சில எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
நித்யா மேனன் சொன்னது:
ஒரு காட்சியில் நடிக்கும் போதே தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் கவர்ச்சி பொருளாக காட்டுவதை விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக சொல்ல வேண்டும். நம் உரிமையை நிலைநாட்ட வேண்டும். இது அவரவர் முன்னுரிமை பொறுத்தது. புகழ் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவர்கள் எதற்கும் துணிகிறார்கள். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே நடிகைகள் தங்களுடைய எல்லைகளை தெளிவாக தெரிவிப்பது ரொம்பவே முக்கியமான ஒன்று. தன்னை ஒரு பொருளாக பார்ப்பதை ஏற்க முடியாது என்று உறுதியுடன் இருக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு மூல காரணம் சினிமா ரொம்ப கமர்சியலாக மாறியது தான் என்று கூறியிருக்கிறார்.