படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன் - மேடையில் அவரே சொன்ன காரணம் ?

By subhashini · 28/6/2022

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பின் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தில் நித்யா நடித்திருந்தார்.

அதற்கு பிறகு அம்மணி பெரிதாக படங்களில் காணவில்லை. இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன் உருவக் கேலிக்கும் உள்ளாகி இருந்தார். இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மேனன் அவர்கள் சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு இருந்தார். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார். சமீபத்தில் நித்யா மேனன் உடலை குறைத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

நித்யா மேனன் நடிக்கும் படம்:

இதனால் இவருக்கும் மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது. தற்போது தனுஷின் 44வது படமான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=m9zMGBmOfz0&t=5s

திருச்சிற்றம்பலம் படம் பற்றிய தகவல்:

மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். அதோடு இந்த பாடல் வெளியாகி 4 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து நித்யா மேனன் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நித்யா மேனன் வீல் சேரில் வந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மாடர்ன் லவ் ஐதராபாத் தொடர் ட்ரைலர்:

பொதுவாகவே தமிழ் சினிமாவில் நடக்கும் பெரும்பாலான இசை வெளியீடுகள், பத்திரிகையாளர் சந்திப்புகள், ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு முன்னணி நடிகைகள் கலந்து கொள்வது கிடையாது. இது குறித்த சர்ச்சைகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் நித்யா மேனன் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நித்யா மேனன் 'மாடர்ன் லவ் ஐதராபாத்' என்ற இணைய தொடரில் நடித்து இருக்கிறார்.

வீல் சேரில் வந்த நித்யா மேனன்:

இந்த இணைய தொடர் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நித்யா மேனன் வீல்சேரில் வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். அதாவது வீட்டுப் படியில் ஸ்லிப்பாகி விழுந்து காலில் அடி பட்டதாக அவர் கூறியிருந்தார். மேலும், வீல் சேரில் வந்து கையில் ஊன்றுகோல் உடன் மேடை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்தார். நித்யா மேனன் இப்படி கலந்துகொண்டது படக்குழுவினருக்கு மட்டுமில்லாமல் பார்ப்போரையும் நெகிழச் செய்தது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து நித்யா மேனனை பாராட்டி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full