சிக்னலில் சிறுவனிடம் பணத்தை பறிகொடுத்த நிவேதா பெத்துராஜ்- நடந்தது என்ன?

By krithika · 4/11/2024

நடிகை நிவேதா பெத்துராஜ், சிறுவனிடம் பணத்தை பறி கொடுத்த செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதாக இருக்கும் போதே துபாய் சென்றுவிட்டார். அங்கேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இவர் மாடலிங்கில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பிறகு இவர் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் இவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு நாள் கூத்து' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நாயகி என்ற விருதையும் வென்றார். அதன் பிறகு இவர், 'டிக் டிக் டிக்', திமிரு புடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத் தமிழன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.

நிவேதா பெத்துராஜ் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இறுதியாக இவர் தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 'BOO' என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் நிவேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார் நிவேதா. அதில், அடையாறு சிக்னலில் தான் நின்றிருக்கும் போது, அங்கே வந்த எட்டு வயது சிறுவன் அவரிடம் பணம் கேட்டிருந்தாராம்.

நிவேதா பெத்துராஜ் பதிவு:

ஆனால், சும்மா பணம் தர முடியாது என்று நிவேதா கூறியிருக்கிறார். அதற்கு அந்தப் பையன் ஒரு புத்தகத்தை கொடுத்து, அதற்கு 100 ரூபாய் கேட்டுள்ளார். அப்போது நிவேதா 100 ரூபாய் கொடுக்க முயன்ற பொழுது, எனக்கு 500 ரூபாய் தாருங்கள் என்று அந்தப் பையன் கேட்டதாக நிவேதா கூறியுள்ளார். அதனால், அந்தப் பையன் 500 ரூபாய் கேட்ட நிலையில், உடனே அந்தப் பையன் கையில் அந்த புத்தகத்தை மீண்டும் கொடுத்துவிட்டு, தன்னுடைய 100 ரூபாயை சிறுவன் கையில் இருந்து நிவேதா பெத்துராஜ் எடுத்திருக்கிறார்.

பணத்தை பிடுங்கிய சிறுவன்:

அப்போது சிறுவன் புத்தகத்தை வாகனத்திற்குள் வீசிவிட்டு, நிவேதா கையில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டதாகவும் தனது பதிவில் நிவேதா கூறியுள்ளார். அதோடு அந்தப் பதிவில் நிவேதா பெத்துராஜ், ' இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்தப் பிரச்சினையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா' என்று கேள்வி எழுப்பி ‌Yes, No என்ற ஆப்ஷனையும் கொடுத்துள்ளார் .

போலீசார் நடவடிக்கை:

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது அந்தப் பதிவை நிவேதா தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து அடையார் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது நிவேதா பெத்துராஜ் 'பார்ட்டி' இன்னும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதோடு, 'Paravu' என்னும் தெலுங்கு வெப் சீரிஸிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full