தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் மிகவும் குறைவு தான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலர் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். சமந்தா, திரிஷா போன்ற ஒரு சில தமிழ் நடிகைகள் மட்டுமே தமிழில் டாப் நடிகைகளாக வளம் வருகின்றனர். அந்த வகையில் அக்மார்க் தமிழ் நடிகையான நிவேதா பெத்துராஜும் டாப் நடிகை இல்லை என்றாலும் ஒரு பிரபலமான நடிகை தான். பொதுவாக நடிகைகள் பலர் ஆரம்ப காலத்தில் சீரியல் அல்லது சினிமா சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்களாக தான் இருக்கும்.

அவ்வளவு ஏன் திரிஷா, சமந்தா இருவரும் கூட ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தான். அதே போல தமிழ் சினிமாவில் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் என்று பலர் சீரியலில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் நிவேதா பெத்துராஜும் அறிமுகமாகி இருக்க வேண்டியது சீரியல் மூலம் தான.

Advertisement

அக்மார்க் தமிழ் நடிகை :

நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சீரியல் மூலம் என்ட்ரி :

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். எத்தனையோ படங்களில் நடித்தாலும் இன்னும் இவருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை வரவில்லை. தற்போது தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வந்தாலும் இவர் அறிமுகமாகி இருக்க வேண்டியது என்னவோ சீரியல் மூலம் தான்.

Advertisement

பிரம்மாண்ட சீரியல் :

ஆம், நடிகை நிவேதா பெத்துராஜ் சினிமாவிற்கு வரும் முன்னர் நிவேதா பெத்துராஜ் மாடலிங் செய்துகொண்டிருக்கும் போது ஒரு தமிழ் சீரியலிலும் நடித்துள்ளார். அதுதான் பிரம்மாண்டமாக உருவான பொன்னியில் செல்வன், இதில் நந்தினி வேடத்தில் நடித்து வந்தார். ஆனால் சீரியல் சில காரணங்களால் படப்பிடிப்பு நடந்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Advertisement

கைவிடபட்ட பொன்னியின் செல்வன் :

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலுக்காக நிவேதா பெத்துராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இறுதியாக நிவேதா பெத்துராஜ் , பிரபு தேவாவுடன் நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ படம் வெளியாகி தோல்வியை தழுவியது. தற்போது இவர் தமிழில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement