ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்து இருந்ததை தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஹோட்டல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு நடிகை நிவேதா பெத்துராஜ் ஷாக் ஆகி இருக்கிறார். இதுகுறித்து ஆதாரத்துடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள நிவேதா பெத்துராஜ, ஸ்விக்கி (Swiggy) உணவக செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

Advertisement

மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார். அதே போல கரப்பான் பூச்சியை சமைக்கும் ஹோட்டல்களில் பெயரையும் குறிப்பிட்டு விடுங்கள் என்றும் கூறியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

அதே போல சம்மந்தபட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் ஒன்றையும் அனுப்பி இருந்தார். இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஹோட்டலுக்கு ரெய்டுவிட்ட அதிகாரிகள், அங்கு உணவு தயாரிக்கும் கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்படவில்லை. உணவு பதப்படுத்தும் பெட்டிகளும் தரமாக இல்லை என்றும் இன்னும் 3 நாட்களில் அனைத்து இடங்களையும் சரி செய்ய வேண்டும் என ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

Advertisement

மேலும், மூன்று நாட்களுக்கு ஹோட்டலை திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், அந்த ஹோட்டலின் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த கெட்டுப்போன 10 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிரியாணி உள்பட உணவு பொருட்களையும் பரிசோதனைக்காக எடுத்து சென்று உள்ளனர்.

Advertisement
Advertisement